Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன இப்படி இறங்கிட்டாரு.. விஜய் தோற்றுவிடுவார் போல.. நா ரெடி பாடலுக்கு ஷிகர் தவானின் அசத்தல் நடனம்!

மும்பை: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான், விஜய் நடித்துள்ள லியோ படத்தின் "நா ரெடி" பாடலுக்கு ரீல்ஸ் செய்து நடனமாடியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னணி வீரராக இருந்தவர் ஷிகர் தவான். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் என்றால் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் தான். ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணியின் தளபதியாக முன் நின்று அனைத்து அணிகளுக்கும் எதிராக மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் ஷிகர் தவான்.

PBKS Captain Shikar Dhawan dancing for the Naa Ready song from Leo Movie reels is Trending

இவரின் அபாரமான ஆட்டத்தால் இந்திய அணி 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்றது. ஆனால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடருக்கு பின் ஷிகர் தவானுக்கு இந்திய அணியில் முக்கியத்துவம் குறைந்தது. இளம் வீரர்களான கேஎல் ராகுல், சுப்மன் கில், இஷான் கிஷன் ஆகியோரின் எழுச்சி காரணமாக ஷிகர் தவான் இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்டார்.

அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரிலும் காயம் காரணமாக முழுமையாக பங்கேற்க முடியவில்லை. இதனால் பேட்டிங்கிலும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இருப்பினும் மனம் தளராத ஷிகர் தவான், காயத்திலிருந்து குணமடைந்ததோடு பேட்டிங் பயிற்சியையும் தொடங்கியுள்ளார். அதற்கான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றார்.

எவ்வளவு தோல்விகள் வந்தாலும், பின்னடைவை சந்தித்தாலும் ஷிகர் தவானின் முகத்தில் இருக்கும் சிரிப்பு என்றும் மாறாது. கிரிக்கெட் களத்திலேயே ஜாலியாக இருக்கும் ஷிகர் தவான், களத்திற்கு வெளியில் உற்சாகத்தின் எல்லையிலேயே இருப்பார் என்று சொல்லலாம். அதேபோல் ஷிகர் தவான் சினிமா பாடல்களுக்கு அவ்வப்போது ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

PBKS Captain Shikar Dhawan dancing for the Naa Ready song from Leo Movie reels is Trending

டேவிட் வார்னர் அளவிற்கு குடும்பத்துடன் ரீல்ஸ் செய்யவில்லை என்றாலும், ஷிகர் தவான் சக வீரர்களுடன் வெளியிடும் ரீல்ஸ் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள நா ரெடி பாடலுக்கு ஷிகர் தவான் டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இது தமிழ்நாட்டு ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

"நா ரெடி" பாடலில் தோன்றும் விஜய் எப்படி சட்டை பட்டனை கழற்றிவிட்டு மாஸாக இருப்பாரோ, அதேபோல் ஷிகர் தவானும் சட்டை பட்டனை கழற்றிவிட்டு ரீல்ஸ் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் வாயில் சிகரெட்டிற்கு பதில் ஷிகர் தவான் குச்சியை வைத்து ரீல்ஸ் செய்துள்ளது பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த பாடலுக்கு பலரும் சிகரெட் வைத்து ரீல்ஸ் செய்து வந்த நிலையில், ஷிகர் தவான் குச்சியை வைத்து ரீல்ஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 24, 2023, 12:39 [IST]
Other articles published on Jul 24, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+