Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: பஞ்சாப் கிங்ஸ்-இன் ஐபிஎல் அட்டவணை.. ஸ்ரேயாஸ் அணி 2 சொந்த மைதானங்களில் ஆட முடிவு!

சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் முழுமையான லீக் போட்டி அட்டவணையை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கடந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்திய பஞ்சாப் அணி, இந்த முறை ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலும், பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் வழிகாட்டுதலிலும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறது.

பஞ்சாப் கிங்ஸ் அணி தனது முதல் லீக் போட்டியில் மார்ச் 31 ஆம் தேதி முல்லான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு தனது பயணத்தைத் தொடங்குகிறது. புதிய சண்டிகர் மைதானத்தில் நான்கு லீக் போட்டிகளிலும், தர்மசாலா மைதானத்தில் மூன்று போட்டிகளிலும் விளையாட உள்ளது. பஞ்சாப் அணி விளையாடவுள்ள 14 லீக் போட்டிகளுக்கான தேதிகள், நேரம் மற்றும் மைதானங்கள் குறித்த முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

PBKS Schedule Punjab Kings Full Schedule Released Shreyas Iyer team to play 3 matches in Dharamshala

பஞ்சாப் கிங்ஸ் அணியின் லீக் போட்டிகள் முழு அட்டவணை:

மார்ச் 31 - 7:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - புதிய சண்டிகர்
ஏப்ரல் 3 - 7:30 PM - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - சென்னை
ஏப்ரல் 6 - 7:30 PM - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா
ஏப்ரல் 11 - 3:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - புதிய சண்டிகர்
ஏப்ரல் 16 - 7:30 PM - மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - மும்பை
ஏப்ரல் 19 - 7:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - புதிய சண்டிகர்
ஏப்ரல் 25 - 3:30 PM - டெல்லி கேபிடல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி
ஏப்ரல் 28 - 7:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - புதிய சண்டிகர்
மே 3 - 7:30 PM - குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - அகமதாபாத்
மே 6 - 7:30 PM - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ் - ஹைதராபாத்
மே 11 - 7:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் - தர்மசாலா
மே 14 - 7:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - தர்மசாலா
மே 17 - 3:30 PM - பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - தர்மசாலா
மே 23 - 7:30 PM - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ

Story first published: Thursday, March 26, 2026, 20:57 [IST]
Other articles published on Mar 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+