Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ராஜஸ்தான் ராயல்ஸ்-ஐ பொளந்த பஞ்சாப் அணி.. மரண அடி அடித்த வதேரா, ஷஷான்க்.. 219 ரன் குவிப்பு

ஜெய்ப்பூர்: 2025 ஐபிஎல் தொடரில் 59ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி அதிரடியாக ஆடியது. அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை எடுத்தது.

3.1 ஓவர்களில் 34 ரன்கள் எடுத்தது. அதன் பின் வெகுண்டெழுந்து அதிரடியாக ஆடியது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் துவக்க வீரர் ஆர்யா 7 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் அறிமுகமான மிட்செல் ஓவன் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு துவக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 10 பந்துகளில் 21 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார்.

PBKS Scores 219 5 Against RR in IPL 2025 Match 59 Wadhera Shashank Shine

இதை அடுத்து, 3.1 ஓவரில் 34 ரன்கள் எடுத்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி. அடுத்து நான்காம் வரிசையில் இறங்கிய நெஹல் வதேரா அதிரடியாக ஆடினார். அவர் 37 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்தார். நெஹல் வதேரா ஐந்து பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடித்திருந்தார்.

அதன் பின் கடைசி நேரத்தில் சஷான்க் சிங் மற்றும் அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் தங்கள் பங்கிற்கு பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசினர். சஷான்க் சிங் 30 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார். அஸ்மத்துல்லா ஓமர்ஜாய் 9 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தார். இதை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஃபசல்ஹக் ஃபாரூக்கி 3 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக் கொடுத்திருந்தார். துஷார் தேஷ்பாண்டே 37 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரியான் பராக் 3 ஓவர்களில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். ஆகாஷ் மத்வால் 4 ஓவர்களில் 48 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். வனிந்து ஹசரங்கா 3 ஓவர்களில் 33 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை.

Story first published: Sunday, May 18, 2025, 17:35 [IST]
Other articles published on May 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+