Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PBKS vs DC: டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் 5 வீரர்கள் மாற்றம்.. டாஸ் வென்ற உடன் எடுத்த முடிவு

தரம்சாலா: 2026 ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த சவாலான ஆட்டத்தில், டெல்லி அணி தனது கௌரவத்தை நிலைநாட்டப் போராட உள்ளது.

டாஸ் வென்ற பிறகு பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல், "நாங்கள் முதலில் பந்துவீசப்போகிறோம். இந்த சீசனில் எங்களுக்கு டாஸ் மட்டும் தான் சாதகமாக முடிகிறது. முக்கியமான தருணங்களில் பேட்டிங் அல்லது பந்துவீச்சில் செய்யும் சிறு தவறுகளால் தான் நாங்கள் வெற்றியை நழுவ விடுகிறோம். மற்றபடி நாங்கள் மோசமாக விளையாடவில்லை. இன்று எங்களது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். மைதானம் புதிதாக இருப்பதால் ஆரம்பத்தில் புதிய பந்து பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம்" என்றார். இந்தப் போட்டியில் டெல்லி அணியில் அபிஷேக் போரல், சாஹில் பரேக், டேவிட் மில்லர், மாதவ் திவாரி மற்றும் ஆகிப் நபி என 5 அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

PBKS vs DC Delhi Capitals Choose to Bowl in Dharamsala as Ben Dwarshuis Debuts for Punjab Kings

மறுபுறம் பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறுகையில், "ஆடுகளத்தில் விளையாடும் வரை அதன் தன்மையை முழுமையாக கணிக்க முடியாது. புள்ளிப்பட்டியலைப் பற்றி அதிகம் யோசிக்காமல் எங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடுவோம். நெருக்கடியான நேரங்களில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறியதே கடந்த போட்டிகளின் சறுக்கலுக்குக் காரணம். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பென் வார்ஷுயிஸ் அறிமுகமாகிறார். லாக்கி பெர்குசனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது," என தெரிவித்தார்.

தரம்சாலா மைதானத்தின் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆரம்பத்தில் கைகொடுக்கும் என வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர். மைதானத்தின் உயரம் மற்றும் குளிர்ந்த காற்று பந்தை நன்றாக ஸ்விங் செய்ய உதவும். இதனால் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களுக்கு ஆரம்ப ஓவர்கள் சவாலாக இருக்கும்.

IPL 2026: ஐபிஎல் அணி ஓனர்னா என்ன வேணா பண்ணலாமா? பிசிசிஐ 'ரெட் கார்டு'.. விதிகளை மீறினால் நடவடிக்கை

IPL 2026: ஐபிஎல் அணி ஓனர்னா என்ன வேணா பண்ணலாமா? பிசிசிஐ 'ரெட் கார்டு'.. விதிகளை மீறினால் நடவடிக்கை

அணிகளின் விவரம்:

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, கூப்பர் கோனோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சூர்யான்ஷ் ஷெட்ஜ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், பென் வார்ஷுயிஸ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால்.

டெல்லி கேப்பிடல்ஸ்: கே.எல். ராகுல், அபிஷேக் போரல், சாஹில் பரேக், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், அக்சர் படேல் (கேப்டன்), மாதவ் திவாரி, முகேஷ் குமார், ஆகிப் நபி, மிட்செல் ஸ்டார்க், லுங்கி நெகிடி.

Story first published: Monday, May 11, 2026, 19:22 [IST]
Other articles published on May 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+