Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.18 கோடி வொர்த்து வர்மா.. சாஹல் சுழலில் மூழ்கிய கேகேஆர்.. 3 ஓவரில் ஆட்டத்தையே திருப்பிட்டாரு!

சண்டிகர்: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. பஞ்சாப் அணி தரப்பில் 112 ரன்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கேகேஆர் அணி 95 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளது. பஞ்சாப் அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக சாஹல் பவுலிங் அமைந்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில் கேகேஆர் - பஞ்சாப் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 15.3 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய கேகேஆர் அணி 15.1 ஓவர்களில் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 111 ரன்கள் என்ற குறைந்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்து பஞ்சாப் அணி புதிய சாதனை படைத்துள்ளது.

PBKS vs KKR Yuzvendra Chahal bowling is the turning point for PBKS win by 16 runs against KKR at New Chandigarh

அதுமட்டுமல்லாமல் 2024ஆம் ஆண்டு கேகேஆர் அணிக்கு எதிரான 262 ரன்கள் என்ற ஸ்கோரை பஞ்சாப் அணி சேஸிங் செய்து புதிய சாதனை செய்தது. தற்போது 111 ரன்கள் என்ற குறைந்தபட்ச ஸ்கோரை டிஃபெண்ட் செய்து புதிய வரலாற்றை பஞ்சாப் அணி படைத்திருக்கிறது. டைட்டானிக் கப்பல் கவிழ்ந்த நாளான இன்று, கேகேஆர் அணியின் கப்பலும் கவிழ்ந்துவிட்டதாக பஞ்சாப் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹல் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் சாஹல் பவுலிங் செய்ய 8வது ஓவரில் அழைக்கப்பட்டார். அப்போது கேகேஆர் அணியின் ஸ்கோர் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 60 ரன்களை சேர்த்திருந்தது. ஆனால் சாஹல் வீசிய முதல் ஓவரிலேயே 8 ரன்களை விட்டுக் கொடுத்து ரஹானேவின் விக்கெட்டை வீழ்த்தி கம்பேக் கொடுத்தார்.

தொடர்ந்து அவரின் 2வது ஓவரில் 1 ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்து ரகுவன்ஷி விக்கெட்டை வீழ்த்த, தொடர்ந்து 3வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ரிங்கு சிங் மற்றும் ரமன்தீப் சிங் விக்கெட்டை அடுத்தடுத்து பந்துகளில் வீழ்த்தி பஞ்சாப் அணியின் கம்பேக்கிற்கு காரணமாக அமைந்துள்ளார். இறுதியாக 4 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் சாஹல்.

ஐபிஎல் மெகா ஏலத்தின் போது யுஸ்வேந்திர சாஹலை வாங்குவதற்காக பஞ்சாப் அணி எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருந்தது. அதற்கேற்ப ரூ.18 கோடி கொடுத்து சாஹலை பஞ்சாப் கிங்ஸ் வாங்கினார்கள். ஆனால் கடந்த சில போட்டிகளாக சாஹலின் பவுலிங் பெரியளவில் தாக்கத்தை கொடுக்காத நிலையில், தற்போது பஞ்சாப் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு வெற்றியை சாஹல் பெற்று கொடுத்துள்ளார்.

Story first published: Tuesday, April 15, 2025, 23:09 [IST]
Other articles published on Apr 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+