Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PBKS vs LSG: பஞ்சாப்-க்கு சாதகமாக விழுந்த டாஸ்.. பிளேயிங் லெவனில் நிகழ்ந்த மாற்றம்.. பண்ட்க்கு சவால்

லக்னோ: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் இன்றைய லீக் ஆட்டத்தில் லக்னோ அணியும், பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த போட்டி லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் முதலில் பந்து வீசப் போகிறோம். இது புதிய மைதானம், புதிய ஆடுகளம், மேலும் பனிப்பொழிவு மிகப்பெரிய தாக்கத்தை இன்றைய ஆட்டத்தில் ஏற்படுத்தும். இது செம்மண்ணால் உருவாக்கப்பட்ட ஆடுகளமாக இருக்கின்றது.

PBKS vs LSG

நாங்கள் எங்கள் அணி வீரர்களுக்கு முழு சுதந்திரத்தை அளித்து இருக்கின்றோம். சூழலுக்கு தகுந்த மாதிரி விளையாடினால்தான் வெற்றி பெற முடியும். அதுதான் எங்களுடைய குறிக்கோள். நாங்கள் பெரியதாக எதையும் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. அனைத்தையும் சிம்பிளாகவே வைத்துக் கொள்கின்றோம்.

நாங்கள் எந்த மாதிரி ஆடுகளத்தில் விளையாடப் போகிறோம் என்று தெரியவில்லை. எந்த சூழலாக இருந்தாலும் அதற்கு ஏற்ற வகையில் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்றைய ஆட்டத்தில் லோகி பெகுர்சன் அணிக்குள் வருகிறார் என்று ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அணியில் இன்று ஆப்கானிஸ்தான் வீரர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், நாங்களும் முதலில் பந்து வீச தான் தயாராக இருந்தோம். ஆனால் இது போன்ற விஷயங்கள் எல்லாம் என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை. எனவே பேட்டிங்கில் முதலீடு செய்வது மகிழ்ச்சி தான். இன்று எங்கள் அணிக்கு பல ரசிகர்கள் ஆதரவு அளிக்கிறார்கள்.

நாங்கள் கண்டிப்பாக சிறந்த ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மைதானத்தின் சுற்றளவு 70 மீட்டர், 64 மீட்டர், 77 மீட்டர் என்ற அளவில் தான் இருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் அதிக அளவு ரன்கள் குவிக்கப்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Story first published: Tuesday, April 1, 2025, 19:35 [IST]
Other articles published on Apr 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+