Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

RCB vs PBKS: ஆர்சிபி-க்கு அணிக்கு திரும்பிய நட்சத்திர பவுலர்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்

முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் சுற்று இன்று தொடங்கியது. முதல் தகுதிச்சுற்றுப் போட்டியான 'குவாலிஃபையர் 1'ல் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முல்லான்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு திரும்பினார் அந்த அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் திரும்பினார்.

PBKS vs RCB IPL 2025 Playoffs RCB won toss and chose to bowl first

கடந்த இரண்டு போட்டிகளாக விளையாடாத ஜோஷ் ஹேசில்வுட் அணிக்குத் திரும்பி இருப்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் மார்கோ ஜான்சன் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுவிட்ட நிலையில், அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் அஸ்மத்துல்லா ஒமர்சாய் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அணிகள்:

பஞ்சாப் கிங்ஸ் (விளையாடும் லெவன்): பிரியன்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ் (கீ), ஸ்ரேயாஸ் ஐயர் (கே), நெஹால் வடேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், கைல் ஜாமிசன்.

பஞ்சாப் கிங்ஸ் இம்பாக்ட் சப்: விஜய் குமார் வைஷாக், பிரவீன் துபே, சூர்யன்ஷ் ஷெட்ஜ், முஷீர் கான், சேவியர் பார்ட்லெட்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (விளையாடும் லெவன்): விராட் கோலி, பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா (கீ), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் ஷர்மா.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இம்பாக்ட் சப்: மயங்க் அகர்வால், ரசிக் சலாம், மனோஜ் பண்டகே, டிம் சீஃபர்ட், ஸ்வப்னில் சிங்.

டாஸ் வென்ற பிறகு இரு அணி கேப்டன்கள் பேச்சு:

டாஸ் வென்ற பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக மீண்டும் திரும்பிய ரஜத் படிதார் பேசுகையில், "நாங்கள் முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளோம். இந்தப் பிட்ச் மிகவும் கடினமாக இருக்கும். பவுன்சர் நன்றாக உள்ளது. முதல் சில ஓவர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், "நாங்களும் முதலில் பந்து வீசவே முடிவு செய்திருந்தோம். இங்கே இருக்கும் ரெக்கார்டை எடுத்துப் பார்த்தால், முதலில் பேட்டிங் செய்யும் அணிகள் நன்றாகவே பேட்டிங் செய்து உள்ளன. எனவே நான் இதை நல்ல விஷயமாகப் பார்க்கிறேன். ரசிகர்கள் எங்களுக்கு நன்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இது போன்ற ஒரு அதிர்வலை நாம் மைதானத்திற்கு நுழையும் போது இருக்க வேண்டும். அது நமக்கு அதிக சக்தியை அளிக்கும்" என்றார்.

Story first published: Thursday, May 29, 2025, 19:12 [IST]
Other articles published on May 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+