Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: என்னா அடி.. 205 ரன் எகிறிய ஸ்ட்ரைக் ரேட்.. பஞ்சாப் பவுலிங்கை பொளந்த ராஜஸ்தான் வீரர்கள்

முல்லான்பூர்: 2025 ஐபிஎல் தொடரின் 18-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் வீரர்கள் அனைவருமே அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் தான் ரன் சேர்த்தனர். குறைந்தது 140 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்தனர்.

சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் கேப்டனாக திரும்பிய நிலையில் சிறப்பாக ஆடினார். அவர் 26 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து லோக்கி பெர்குசன் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுபுறம் ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடினார். அவர் 45 பந்துகளில் 67 ரன்கள் சேர்த்தார். மூன்று பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசினார்.

PBKS vs RR IPL 2025 Rajasthan Royals Set Target of 206 for Punjab Kings

ரியான் பராக் மூன்றாம் வரிசையில் இறங்கி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் 25 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். மூன்று பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களை விளாசினார். நிதிஷ் ராணா 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஷிம்ரோன் ஹெட்மையர் 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். துருவ் ஜுரல் தன் பங்கிற்கு கடைசி ஓவரில் அதிரடியாக ஆடினார். அவர் ஐந்து பந்துகளில் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் கிங்ஸுக்கு 206 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் லோக்கி பெர்குசன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அர்ஷ்தீப் சிங் மற்றும் மார்கோ ஜான்சன் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.

முதல் இன்னிங்ஸ் சுருக்கம்:

  • டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது.

  • ஜெய்ஸ்வால் 67 ரன்களும், சஞ்சு சாம்சன் 38 ரன்களும், ரியான் பராக் 43 ரன்களும் எடுத்தனர்.

  • பஞ்சாப் அணியில் லோக்கி பெர்குசன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Saturday, April 5, 2025, 21:24 [IST]
Other articles published on Apr 5, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+