லண்டன் : அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாங்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளை விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அறிவித்ததை அடுத்து தற்போது ஜெய்ஷா அடிபணிந்து விட்டார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளை பாகிஸ்தானில் நடத்தக்கூடாது என இந்தியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இந்தியா விளையாடும் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்தலாம் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது.
முதலில் இதனை ஒப்புக்கொண்ட இந்தியா ஒட்டுமொத்த தொடரையும் வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனால் கடுப்பான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை தாங்கள் பங்கேற்க இந்தியா வரமாட்டோம் என்றும் அப்படி வந்தாலும் அகமதாபாத்தில் எந்த ஒரு போட்டிகளையும் நடத்தக்கூடாது என்றும் பாகிஸ்தான் போர் கொடி தூக்கியது.
இதனால் உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் உலகக் கோப்பை பைனலை நடத்த வேண்டும் என்ற ஜெய்ஷாவின் ஆசைக்கு ஆபத்து வந்தது. இதனால் வேறு வழி இன்றி தற்போது பாகிஸ்தானின் மிரட்டலுக்கு பிசிசிஐ அடிப்பணிந்து இருக்கிறது. இதனை அடுத்து ஆசியக் கோப்பை போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த பிசிசிஐ ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால் இந்தியா விளையாடும் ஆட்டங்கள் மற்றும் வேறு ஒரு நாட்டுக்கு மாற்றப்படும். அதன்படி பாகிஸ்தான் -நேப்பால், வங்கதேசம்- ஆப்கானிஸ்தான், ஆப்கானிஸ்தான்- இலங்கை, வங்கதேசம்- இலங்கை ஆகிய அணிகள் மோதும் ஆட்டம் மட்டும் பாகிஸ்தானில் நடத்தப்படும். இதனால் உலகக் கோப்பை தொடருக்கான மைதானங்களுக்கு பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டுள்ளது.
அதன்படி இந்தியாவும் பாகிஸ்தானும் அகமதாபாத்தில் விளையாட உள்ளன. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆட்டம் சென்னையிலும், இந்தியா- இங்கிலாந்து மோதும் ஆட்டம் லக்னோவிலும் நடைபெறும். இதே போன்று பாகிஸ்தான அணி தங்களுடைய பெரும்பான்மையான ஆட்டங்களை ஹைதராபாத்திலும் சென்னையிலும் விளையாட உள்ளது.