For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வந்தா நல்லா இருக்கும்னுதான் சொன்னோம்... ஜகா வாங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

இஸ்லாமாபாத் : இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் கண்டிப்பாக பங்கேற்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்க பிசிசிஐ அனுமதிக்காத பட்சத்தில் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ வாசிம் கான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தன்னுடை பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஐசிசி சார்பில் நடத்தப்படும் டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

2021ல் இந்தியாவில் நடைபெறுகிறது

2021ல் இந்தியாவில் நடைபெறுகிறது

அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

பாகிஸ்தானில் விளையாட பிசிசிஐ மறுப்பு

பாகிஸ்தானில் விளையாட பிசிசிஐ மறுப்பு

இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசியா கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்பதற்காக அந்த நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த தொடரை வங்கதேசத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் நடத்த விருப்பம்

பாகிஸ்தானில் நடத்த விருப்பம்

ஆசிய கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த அந்நாடு விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அதை அங்கு நடத்த முடியாத சூழலில், இதுகுறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்யும் என்றும் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை எச்சரித்த பிசிபி

இந்தியாவை எச்சரித்த பிசிபி

முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்றால் மட்டுமே இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சிஇஓ வாசிம் கான் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம்

தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம்

இந்நிலையில் தான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், டி20 உலக கோப்பை ஐசிசி சார்பில் நடத்தப்படுவதால் அதிலிருந்து பாகிஸ்தான் விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Sunday, January 26, 2020, 17:31 [IST]
Other articles published on Jan 26, 2020
English summary
Pakistan CEO Clarified that his worlds taken out of context
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+