For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 உலககோப்பை வெல்ல பாக். திட்டம்.. பலே அறிவிப்பை வெளியிட்ட ரமிஸ் ராஜா.. தூங்குகிறதா பிசிசிஐ

கராச்சி: ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் வரும் 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.

அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கும் இந்த மொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கிறது. இந்த நிலையில், உலகக் கோப்பையை எப்படியாவது வெல்ல வேண்டும் என பல்வேறு அணிகளும் பல்வேறு திட்டத்தை வகுத்துள்ளது.

இதுவரை ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் உலகக் கோப்பை தொடருக்கான தங்களது வீரர்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் தற்போது புதிய முடிவு ஒன்றை டி20 உலக கோப்பை தொடருக்காக எடுத்துள்ளது.

நியூசிலாந்து பயணம்

நியூசிலாந்து பயணம்

ஆஸ்திரேலிய ஆடுகளம் சற்று வித்தியாசமானது. ஆசிய கண்டத்திலிருந்து செல்லும் அணிக்கு கடும் சவால்களை அளிக்க கூடியது. இதில் பந்து நன்றாக எழும்பும். இது ஒரு சில நேரம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவும் முடியும், பாதகமாகவும் முடியும். இந்த நிலையில், தான் பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

சவாலான ஆடுகளம்

சவாலான ஆடுகளம்

அங்கு முத்தரப்பு டி20 தொடரில் பாகிஸ்தான் பங்கேற்கிறது. நியூசிலாந்து மண்ணிலும் பந்து பேட்டிற்கு நன்றாக வரும். ஆனால் சிறப்பு நிற பந்துகள் அங்கு நன்றாக ஸ்விங் ஆகும். இதனால், இந்த தொடர் பாகிஸ்தான் அணிக்கு நல்ல பயிற்சி களமாக இருக்கும். ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் செயல்பாடு, அனைவராலும் பாராட்டப்படுகிறது.

ரமிஸ் ராஜா அதிரடி

ரமிஸ் ராஜா அதிரடி

இந்த நிலையில், பாகிஸ்தானின் உத்வேகத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக , ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்தியூ ஹேடனை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மெண்டராக ரமிஸ் ராஜா நியமித்துள்ளார். இதே போன்று வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசகராக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் பிளாண்டரும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் ஏற்கனவே கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடன் பணியாற்றி அரையிறுதி வரை அழைத்து சென்றனர்.

நல்ல முடிவு

நல்ல முடிவு

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமிஸ் ராஜா, ஆஸ்திரேலிய களத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற ஹேடனின் அனுபவம் அவருக்கு நிறையவே உள்ளது. இது பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமையும் என்று கூறியுள்ளார். ஆனால், இந்திய அணிக்காக பிசிசிஐ இதுவரை ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. ஆஸ்திரேலியாவில் டி20 தொடரை பிசிசிஐ நடத்தும் என எதிர்பார்த்தது. ஆனால் அது கைக்கூட வில்லை.

Story first published: Friday, September 9, 2022, 18:44 [IST]
Other articles published on Sep 9, 2022
English summary
PCB Chairman appoints Mathew Hayden as Mentor for Pakistan team டி20 உலககோப்பை வெல்ல பாக். திட்டம்.. பலே அறிவிப்பை வெளியிட்ட ரமிஸ் ராஜா.. தூங்குகிறதா பிசிசிஐ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+