Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் போட்டியை தடுக்க பாக். திட்டம்.. ரமீஸ் ராஜா போடும் காமெடி பிளான்.. பிசிசிஐயை சீண்டும் பாக்!

கராச்சி: பிசிசிஐயை சீண்டி பார்க்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமீஸ் ராஜா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் தொடருக்கு போட்டியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்டது தான் பிஎஸ்எல் கிரிக்கெட் தொடர்.

ஆனால் ஐபிஎல் மெகா வெற்றி பெற்றுள்ள நிலையில், தற்போது தான் பி.எஸ்.எல். தொடர் வளர்ந்து வருகிறது.

பாக். தொந்தரவு

பாக். தொந்தரவு

ஐபிஎல் தொடர் மூலம் பிசிசிஐ பல்லாயிரம் கோடி கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தற்போது தான் 300 கோடி ரூபாயை தொட்டுள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நேரத்தில் சர்வதேச போட்டிகளை நடத்தி பாகிஸ்தான் ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளுக்கு தொந்தரவு செய்து வந்தது.

புதிய முடிவு

புதிய முடிவு

கடந்த ஆண்டு நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சுற்றுப் பயணத்துக்கு அழைத்தது.அதே போன்று இம்முறை ஆஸ்திரேலியாவை வைத்து ஏப்ரல் முதல் வாரம் வரை போட்டிகளை நடத்தி பாகிஸ்தான் தொந்தரவு அளிக்க முயன்றது. தற்போது பாகிஸ்தான் பி.எஸ்.எல் தொடர்பாக புதிய முடிவை எடுத்துள்ளது.

இனி ஏலம்

இனி ஏலம்

அதன்படி, இனி ஐபிஎல் போட்டிகளுக்கு நடத்துவது போல் பிஎஸ்எல் தொடருக்கும் ஏலம் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை அணிக்கு தேர்வு செய்து வந்தனர். தற்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.

Recommended Video

Ind vs SL Bengaluru Police Filed Case On Kohli Fans After They Breached Security Rules
யார் செல்வார்கள்?

யார் செல்வார்கள்?

இது குறித்து பேசிய ரமிஸ் ராஜா, வீரர்கள் ஏலத்தில் அணிகள் செலவு செய்யும் பணத்திற்கான உச்ச வரம்பை உயர்த்த உள்ளதாக கூறினார். அப்படி செய்யும் பட்சத்தில் எந்த வீரர்கள் இனி பிஎஸ்எல் தொடருக்கு பதிலாக ஐபிஎல் போட்டியை தேர்ந்து எடுப்பார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்று கூறினார். பிஎஸ்தொடரில் அதிகபட்ச ஊதியம் 1 கோடி, ஆனால் ஐபிஎல் தொடரில் 17 கோடி. இதனால் ரமிஸ் ராஜா ஏமாற்றம் அடையவே வாய்ப்பு அதிகம் உள்ளது.

Story first published: Tuesday, March 15, 2022, 16:10 [IST]
Other articles published on Mar 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+