Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“மூளை இல்லாதவர்கள்”.. பாலியல் வழக்கில் சிக்கிய பாக்.வீரர்.. ஆதரவுக்குரல் கொடுத்த கிரிக்கெட் வாரியம்

லாகூர்: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பாக். வீரருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Recommended Video

Pakistan Spinner Yasir Shah செய்த கொடூரம்! Friendக்கு உதவியதால் FIR File ஆனது | OneIndia Tamil

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக விளங்குபவர் யாஷிர் ஷா. சுழற்பந்துவீச்சாளரான இவர், இதுவரை 46 டெஸ்ட்களில் 235 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

இவர் மீது தற்போது இஸ்லாமாபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் 14 வயதாகும் சிறுமி, பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

பாலியல் வழக்கு

பாலியல் வழக்கு

கிரிக்கெட் வீரர் யாசிர் ஷாவின் நண்பரான ஃபர்ஹான், 14 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த குற்றத்திற்கு யாஷிர் ஷாவும் உடந்தையாக இருந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் யாஷிர் ஷாவிடம் புகார் அளிக்க, தனது நண்பன் செய்ததை வெளியே சொன்னால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

இதனையடுத்து, பாலியல் விவகாரத்தில் உதவியது, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளில் யாஷிர் ஷா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் உதவி கேட்டு வந்த பெண்ணை மிரட்டி, அவமானப்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளின் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தற்போது பெரும் பூதாகரத்தை கிளப்பியுள்ளது.

வாரியம் ஆதரவு

வாரியம் ஆதரவு

இந்நிலையில் இந்த விவகாரத்தில் யாஷீர் ஷாவுக்கு பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஷ் ராஜா ஆதரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், விமர்சனம் செய்பவர்களை மூளை இல்லாதவர்கள் என்று தான் கூற வேண்டும். நாங்கள் ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சி அளிக்கும் போது, யார் யாருடன் பழக வேண்டும், எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்கிறோம். அதில் யாஷீர் மிகவும் குறுகிய நட்பு வட்டாரத்தை கொண்ட வீரர்.

இது தவறான நேரம்

இது தவறான நேரம்

இந்த விவகாரத்தில் உண்மை தன்மை என்னவென்பது எனக்கு தெரியவில்லை. செய்திகளில் வரும் தலைப்புகள் மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நல்லதல்ல. அதுவும் சர்வதேச அளவில் பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது வளர்ந்து வரும் சூழலில் இப்படி நடந்திருப்பது ஏற்புடையதல்ல என கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 23, 2021, 9:59 [IST]
Other articles published on Dec 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+