Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்ரிதி "அவுட்"... விரைவில்!

கராச்சி: பாகிஸ்தான் டி20 அணி கேப்டன் ஷாஹித் அப்ரிதியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றதால் அப்ரிதியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதாம். அவரை பதவியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அப்ரிதியின் செயல்பாடுகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியததிற்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளதாம். குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றதை அது ரசிக்கவில்லையாம்.

மேலும் இந்தியாவில் விளையாடும்போது எனக்கும், எனது அணி வீரர்களுக்கும் பாகிஸ்தானில் கிடைப்பதை விட அதிக அன்பு கிடைப்பதாக அப்ரிதி கூறியதையும் பாகிஸ்தான் கிரி்க்கெட் வாரியம் அவ்வளவு சீக்கிரம் மறக்க விரும்பவில்லையாம். எனவே எல்லாவற்றையும் வைத்து மொத்தமாக அப்ரிதியை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அவராகப் போனால் நல்லது

அவராகப் போனால் நல்லது

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில் அப்ரிதி அவராகவே ஓய்வு பெற்றுச் செல்வதுதான் சிறந்தது. அவர் போகாவிட்டாலும் கூட உலகக் கோப்பைத் தொடருக்குப் பின் அவரை கேப்டன் பதவியில் வாரியம் வைத்திருக்க விரும்பாது.

பேச்சு சரியில்லை

பேச்சு சரியில்லை

இந்தியாவுக்குப் போனதும் அவர் செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய பேச்சுக்களை வாரியம் மறக்கவில்லை. அதை சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளது. எனவே அப்ரிதி புரிந்து கொண்டு அவராகவே போய் விடுவது அவருக்கு நல்லது என்றார் அவர்.

தேர்வாளர்களுக்கும் ஆபத்து

தேர்வாளர்களுக்கும் ஆபத்து

அதேபோல தேர்வாளர்கள் மீதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிருப்தியாக உள்ளதாம். குறிப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷஹாரியார் கானுக்கு ஹாரூன் ரஷீத் தலைமையிலான தேர்வாளர் குழு மீது கடும் அதிருப்தியாக உள்ளாராம்.

வாங்கினாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி

வாங்கினாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி

பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையை வென்றாலும் கூட தேர்வாளர் குழு நீக்கப்படுவது உறுதி என்றும் வாரியத்திற்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

பல தலைகள் உருளப் போகிறது பாஸ்

பல தலைகள் உருளப் போகிறது பாஸ்

மொத்தத்தில் அப்ரிதி உள்பட பலருடைய தலைகள் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னர் உருளுவது நிச்சயம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வக்காருக்கும்

வக்காருக்கும் "ஆப்பு"?

அதேபோல பயிற்சியாளர் வக்கார் யூனிஸையும் நீக்கும் முடிவை வாரியம் எடுக்கும் என்று தெரிகிறது. அவருக்குப் பதில் புதிய பயிற்சியாளரை அது போடத் திட்டமிட்டுள்ளதாம். வக்காருக்குப் பதில் அக்யூப் ஜாவேத் நியமிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.

Story first published: Monday, March 21, 2016, 11:49 [IST]
Other articles published on Mar 21, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+