Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பாகிஸ்தான் 2 மேட்ச் தோற்றதற்கு நீங்கதான் பலியாடு”.. சர்ஃபராஸ் அகமதை கட்டம் கட்டிய நக்வி

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் (பிசிபி) வழக்கமாக நடைபெறும் 'மியூசிக்கல் சேர்' ஆட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-2 எனத் தோற்றதால், தலைமைப் பயிற்சியாளர் சர்ஃபராஸ் அகமது மற்றும் கேப்டன் ஷான் மசூத் ஆகியோரைத் தூக்க பிசிபி தலைவர் மோசின் நக்வி தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

கடந்த 2026 ஆம் ஆண்டு தொடக்கத்தில், பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்டோருக்கான (யு19) அணியை வழிநடத்தி ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பெருமையுடன் மூத்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார் சர்ஃபராஸ் அகமது. மேலும், 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் அணியின் கேப்டனாகவும் இருந்தவர் என்பதும் முக்கிய காரணமாக இருந்தது.

PCB Mulls Sacking Test Head Coach Sarfaraz Ahmed and Captain Shan Masood After Series Defeat to Bangladesh

ஆனால், பாவம்.. இரண்டே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட வங்கதேச தொடரில் தோற்றதற்காக, அவரை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க பிசிபி முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு, அவர் தனது சூட்கேஸைக் கூட அவிழ்த்து வைப்பதற்குள் அடுத்த பயிற்சியாளரைத் தேடத் தொடங்குவது பிசிபி-யின் கைவந்த கலையாகும்.

கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மாற்றிய கேப்டன்கள் மற்றும் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை விட, அவர்கள் விளையாடி வென்ற போட்டிகளின் எண்ணிக்கை குறைவுதான் என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். கேரி கிர்ஸ்டன், ஜேசன் கில்லஸ்பி போன்ற தலைசிறந்த முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர்களையே தலைதெறிக்க ஓட வைத்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

ஒரு தொடரில் தோற்றால் கேப்டன் காலி, அடுத்த தொடரில் தோற்றால் பயிற்சியாளர் காலி என்பதுதான் பிசிபி-யின் எழுதப்படாத விதி. தற்போது கேப்டன் ஷான் மசூத் பதவியும் ஆபத்தில் உள்ளது. அவருக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் சல்மான் அலி ஆகா கேப்டனாக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஹஃபீஸுக்கு வாய்பூட்டு போட புதிய பதவி?

தற்போது, புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் யூனிஸ் கானிடமும், புதிய தலைமைத் தேர்வாளராக முகமது ஹஃபீஸிடமும் பிசிபி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் பிசிபி-யை தொடர்ந்து காரசாரமாக விமர்சித்து வரும் முகமது ஹஃபீஸை அமைதிப்படுத்தவே அவருக்குப் புதிய பதவி வழங்க பிசிபி திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன. அதாவது, "உள்ளே வந்துவிடுங்கள், பிறகு திட்ட மாட்டீர்கள்!" என்ற பிசிபி-யின் திட்டம் இது.

பிரெஞ்சு ஓபன்.. முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாதனை!

பிரெஞ்சு ஓபன்.. முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று அலெக்சாண்டர் ஸ்வெரவ் சாதனை!

பதவி பறிக்கப்படும் சர்ஃபராஸ் மீண்டும் யு19 மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகளின் பயிற்சியாளராகத் மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் இந்த அதிரடி மாற்றங்கள், அடுத்து வரும் தொடர்களுக்குள் மேலும் எத்தனை திருப்பங்களைச் சந்திக்கப் போகிறது என்று பார்க்கலாம்.

IND vs AFG: இந்தியாவுக்கு எதிராக தவறு செய்து விட்டோம்.. ஆப்கானிஸ்தான் கோச் ரிச்சர்ட் வருத்தம்

IND vs AFG: இந்தியாவுக்கு எதிராக தவறு செய்து விட்டோம்.. ஆப்கானிஸ்தான் கோச் ரிச்சர்ட் வருத்தம்
Story first published: Monday, June 8, 2026, 9:17 [IST]
Other articles published on Jun 8, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+