For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 பாகிஸ்தான் வீரர்களுக்கு கொரோனா.. இங்கிலாந்துக்குக் கிளம்பும் முன்பே ஷாக்!

கராச்சி: பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்குக் கிளம்பவுள்ள நிலையில் அந்த அணியின் 3 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

#13YearsOfHITMAN | Rohit Sharma made his debut on this day in 2007

சதாப் கான், ஹாரிஸ் ராப், ஹைதர் அலி ஆகிய 3 வீரர்களுக்கும் நேற்று கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இப்படி உள்ளுக்குள் கொரோனாவை வைத்துக் கொண்டு எப்படி பாகிஸ்தான் அணி இங்கிலாந்து போகப் போகிறது என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

கிரிக்கெட் பத்தி சந்தேகம் வந்தா... உடனே அவருக்குத்தான் போன் பண்ணுவேன்... சஞ்சு சாம்சன் உருக்கம் கிரிக்கெட் பத்தி சந்தேகம் வந்தா... உடனே அவருக்குத்தான் போன் பண்ணுவேன்... சஞ்சு சாம்சன் உருக்கம்

3 பேருக்கு கொரோனா

3 பேருக்கு கொரோனா

இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ராவல்பிண்டியில் இவர்களுக்கு சோதனை எடுக்கப்பட்டபோதுதான் 3 பேருக்கும் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. சோதனை எடுக்கும் வரை அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. தற்போது 3 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வீரரர்கள்

3 வீரரர்கள்

3 வீரர்களில் சதாப் கான் சுழற்பந்து வீச்சாளர் ஆவார். 3 வீரர்களில் இவர் மட்டுமே சற்று பிரபலமான வீரர். ராப் 2 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள பேட்ஸ்மேன் ஆவார். ஹைதர் அலிக்கு இதுதான் முதல் இங்கிலாந்து தொடர். அவர் 3 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில்ஆடியுள்ளார். ஜூன் 28ம் தேதி பாகிஸ்தான் அணி இங்கிலாந்து செல்லவுள்ளது. இதையொட்டி தற்போது அணி வீரர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ராவல்பிண்டியில் சோதனை

ராவல்பிண்டியில் சோதனை

ராவல்பிண்டியில் நடத்தப்பட்ட சோதனையில் இமாத் வாசிம், உஸ்மான் ஷின்வாரி ஆகிய வீரர்களுக்கு முடிவுகள் நெகட்டிவாக வந்துள்ளன. இதையடுத்து அவர்கள் 24ம் தேதி லாகூர் செல்லவுள்ளனர். சோயப் மாலிக், வக்கார் யூனிஸ், கிளிப் டக்கான் உள்ளிட்ட சிலர் தவிர மற்ற வீரர்கள், அதிகாரிகளுக்கு கராச்சி, லாகூர், பெஷாவரில் சோதனை நடத்தப்படவுள்ளது. இன்று இவர்களுக்கான முடிவுகள் வெளி வரும்.

அணியில் 29 பேர்

அணியில் 29 பேர்

29 பேர் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிலால் ஆசிப், இம்ரான் பட், மூசா கான், முகம்மது நவாஸ் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா வந்து அவர் அவதிப்பட்டார். அதேபோல முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் தெளபீக் உமரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டார். வங்கதேச கேப்டன் முர்தஸாவுக்கும் கொரோனா வந்துள்ளது நினைவிருக்கலாம்.

2 தொடர்கள்

2 தொடர்கள்

இங்கிலாந்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடன் தொடர் நடைபெறவுள்ளது. அடுத்த மாதம் அது தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடனான தொடரில் இங்கிலாந்து ஆடவுள்ளது. இரு தொடர்களையும் பயோ செக்யூர் சூழலில் நடத்த இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது.

Story first published: Tuesday, June 23, 2020, 10:37 [IST]
Other articles published on Jun 23, 2020
English summary
Pakistan cricketers Shadab Khan, Haris Rauf and rookie Haider Ali tested positive for COVID-19
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X