Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை தொடருக்கான எழுத்துப்பூர்வ உறுதி கொடுங்க... அடம்பிடிக்கும் பாக். கிரிக்கெட் வாரியம்

கராச்சி : அடுத்த ஆண்டில் டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல 2023ல் 50 ஓவர்கள் கிரிக்கெட்டின் உலக கோப்பை தொடரும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களின் விசா உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து வரும் ஜனவரிக்குள் எழுத்துப்பூர்வ உறுதியளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சிஇஓ கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையாத நிலையில், டி20 உலக கோப்பை தொடரையும் யூஏஇயில் நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறுகிறது

இந்தியாவில் நடைபெறுகிறது

அடுத்த ஆண்டில் டி20 உலக கோப்பை தொடரை இந்தியா நடத்தவுள்ளது. முன்னதாக இங்கிலாந்து தொடர் மற்றும் ஐபில் 2021 தொடர்களையும் முடிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து 2023ல் ஒருநாள் உலக கோப்பை தொடரையும் இந்தியா நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது.

எழுத்துப்பூர்வ உறுதி வேண்டும் -பிசிபி

எழுத்துப்பூர்வ உறுதி வேண்டும் -பிசிபி

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடவுள்ள பாகிஸ்தான் வீரர்களின் விசா உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து வரும் ஜனவரி மாதத்திற்குள் எழுத்துப்பூர்வ உறுதி அளிக்க வேண்டும் என்று பிசிபி சிஇஓ வாசிம் கான் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னதாக பிசிபி தலைவர் ஈசான் மணியும் ஐசிசி மற்றும் பிசிசிஐயிடம் இதுகுறித்து கோரிக்கை விடுத்துள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

யூஏஇயில் நடத்த வேண்டும்

யூஏஇயில் நடத்த வேண்டும்

கிரிக்கெட் பாஸ் யூடியூப் சேனலில் பேசிய வாசிம் கான், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் நிலையற்ற தன்மை காணப்படுவதால், டி20 உலக கோப்பை தொடரை யூஏஇக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் ஆசிய கோப்பை 2022ஐ நடத்துவதற்கான உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கூடிய விரைவில் நடைபெறும்

கூடிய விரைவில் நடைபெறும்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் எல்லை பிரச்சினை தொடர்ந்து நிலவுவதால் இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதை குறிப்பிட்டுள்ள அவர் கூடிய விரைவில் இந்த நிலை மாறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Story first published: Tuesday, December 1, 2020, 10:27 [IST]
Other articles published on Dec 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+