யுவராஜ்சிங்கை விமர்சனம் செய்யும் முன்பு கொஞ்சம் இதையும் யோசிங்க.. கோஹ்லி அட்வைஸ்
பெங்களூர்: யுவராஜை விமர்சனம் செய்பவர்கள் அவரால்தான் இரண்டு உலககோப்பைகள் இந்தியாவுக்கு கிடைத்தது என்பதை மறக்க வேண்டாம் என்று விராட் கோஹ்லி கூறினார்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராயல்சேலஞ்சர்ஸ் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில்,

ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்..
இனிமேல் எந்த கிரிக்கெட் வீரரை பற்றி பத்திரிகைகள் விமர்சித்து எழுதும் முன்பும், ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். ஏனெனில் எப்போது வேண்டுமானாலும் அந்த வீரர் பழைய நிலைக்கு திரும்பிவிட வாய்ப்புள்ளது. முக்கியமான நேரத்தில் யுவராஜ்சிங் பார்முக்கு வந்துள்ளது, பெங்களூர் அணிக்கு உதவிகரமாக உள்ளது.

யுவராஜ் ஒரு உலகதரம்மிக்க வீரர்...
யுவராஜ் ஒரு உலகதரம்மிக்க வீரர். இருமுறை உலககோப்பையை இந்தியா வெல்ல (டி20 உட்பட) அவர்தான் முக்கிய காரணம். அவருக்கு உரிய மரியாதையை நாம் அளித்துதான் ஆக வேண்டும். அணியின் ஓப்பனிங் வீரர்கள் 40 ரன்களாவது சேர்த்தால் பின்வரிசையில் களமிறங்கும் நானோ, யூவியோ, ஏபியோ (ஆப்டி வில்லியர்ஸ்) சிறப்பாக அதை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றார்.

பட்டையை கிளப்பிக் கொண்டுள்ளார்...
நேற்றை ஆட்டத்தையும் சேர்த்து தொடர்ந்து இரு பந்தயங்களில் அரை சதத்தை கடந்து பட்டையை கிளப்பிக் கொண்டுள்ளார் யுவராஜ்சிங். டெல்லி அணியுடனான நேற்றைய போட்டியில் 9 சிக்சர்களை பறக்கவிட்டு எதிரணியை தோற்கடிப்பதில் முக்கிய பங்காற்றினார்.

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில்...
ஆனால் டி20 உலககோப்பை இறுதிபோட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 21 பந்துகளுக்கு 11 ரன்களை அவர் எடுத்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications