மருமகனுக்கு எதிராக சீறிய மாமனார்.. அவர் கேப்டன்சிக்கு சரிபட மாட்டார்.. ஷாகித் அப்ரிடி ஓபன் டாக்!
மும்பை: பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ஷாகின் அப்ரிடிக்கு பதிலாக முகமது ரிஸ்வான் நியமனம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவர் இன்சமாம் உல் ஹக், பயிற்சியாளர்கள் மோர்னே மோர்க்கல் உள்ளிட்டோர் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கேப்டன் பாபர் அசாமும் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத் மற்றும் டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடி அறிவிக்கப்பட்டனர். இதற்கு பின்னால் ஷாகின் அப்ரிடியின் மாமனாரான ஷாகித் அப்ரிடி இருப்பதாக சில விமர்சனங்கள் வெளியாகியது.
இந்த நிலையில் புதிய டெஸ்ட் கேப்டன் ஷான் மசூத் தலைமையில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது. இதன்பின் 3வது டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணி விளையாடவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 12ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. அதன்பின் பிஎஸ்எல் தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தான் அணி களமிறங்கவுள்ளது. இந்த அணிக்கு இளம் வீரரான ஷாகின் அப்ரிடி தலைமையேற்கவுள்ளார்.
இந்த நிலையில் ஷாகின் அப்ரிடிக்கு கேப்டன்சி பதவி வழங்கப்பட்டது குறித்து முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி பேசுகையில், பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரான முகமது ரிஸ்வானின் உழைப்பும், கவனத்தையும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அவர் எப்போதும் அவரின் ஆட்டத்தில் மட்டுமே கவனமாக இருக்கிறார். யார் என்ன செய்கிறார்கள், பின்னால் என்ன நடக்கிறது என்பதில் எந்த கவனமும் செலுத்தவில்லை.
நிச்சயம் பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த போராளி முகமது ரிஸ்வான் தான். இன்னும் சொல்லப்போனால் பாபர் அசாம் பதவி விலகிய பின்னர், முகமது ரிஸ்வானை தான் டி20 அணியின் கேப்டனாக பார்க்க விரும்பினேன். ஆனால் தவறுதலாக ஷாகின் அப்ரிடிக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Story first published: Sunday, December 31, 2023, 20:38 [IST]
Other articles published on Dec 31, 2023


Click it and Unblock the Notifications