Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் வெற்றிக்கு தேவை இன்னும் 6 விக்கெட்... !

ஜோஹன்னஸ்பர்க்: இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவதற்கு இன்னும் 7 வி்க்கெட்கள் தேவை. இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

ஜோஹன்னஸ்பர்க் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது ஆல்ரவுண்ட் அசத்தலை வெளிப்படுத்தியுள்ளது. பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் முழு வீச்சில் இந்தியர்கள் செயல்பட்டு, தென் ஆப்பிரிக்காவை முடக்கிப் போட்டுள்ளனர்.

458 ரன்கள் என்ற கடுமையான இலக்கை நோக்கி தட்டுத் தடுமாறியபடி இன்று கடைசி நாளில் தனது துரத்தலைத் தொடங்கியுள்ளது தென் ஆப்பிரிக்கா. இன்று ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பீட்டர்சனை வீழ்த்தியது இந்தியா.

Petersen falls early, India 6 wickets away from victory

தென் ஆப்பிரிக்கா தற்போது 4 விக்கெட்களை இழந்துள்ளது. அபாயகரமான கல்லிஸையும் இந்தியாவின் ஜாகிர் கான் சற்று முன்பு பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார்.

ரசிகர்களிடையே இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு திரில்லான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் இந்தியா இதுவரை தென் ஆப்பிரிக்காவிடம் எந்த டெஸ்ட் போட்டியிலும் தோற்றதே இல்லை. இந்த நிலையில் இன்று வென்றால், அது இந்தியாவுக்கு இங்கு கிடைத்த முதல் வெற்றியாக அமையும்.

Story first published: Sunday, December 22, 2013, 15:41 [IST]
Other articles published on Dec 22, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+