Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மூத்த வீரர்கள் அணிக்காக கைக்கோர்ப்பது சிறப்பானது... ஷமி தனித்துவமானவர்.. ராகுல்

துபாய் : நேற்றைய 36வது ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி திரில் வெற்றியை பெற்றுள்ளது.

இந்த போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்கள் போடப்பட்ட நிலையில், முதல் சூப்பர் ஓவரில் எதிரணியை 6 ரன்களில் சுருட்டினார் முகமது ஷமி.

இந்நிலையில் அவர் தனித்துவமான வீரர் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கேஎல் ராகுல் அதிரடி

கேஎல் ராகுல் அதிரடி

நேற்றைய ஐபிஎல்லின் 36வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய நிலையில், முதலில் ஆடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 177 ரன்களை இலக்காக அமைத்தது. அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 77 ரன்களை அடித்து அதகளம் செய்தார்.

6 ரன்களில் சுருட்டிய ஷமி

6 ரன்களில் சுருட்டிய ஷமி

தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை அடித்து ஆட்டத்தை முடித்துக் கொண்ட நிலையில் சூப்பர் ஓவர் போடப்பட்டது. இதில் ரோகித் சர்மா மற்றும் குவின்டன் டீ காக் களமிறங்கி ஆடினர். அவர்கள் இருவரையும் 6 ரன்களில் சுருட்டினார் முகமது ஷமி.

புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்

புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்

இந்த முதல் சூப்பர் ஓவரும் டிரா ஆக, தொடர்ந்து இரண்டாவது சூப்பர் ஓவர் போடப்பட்டது. இதில் கிறிஸ் கெயில் மற்றும் மயங்க் அகர்வால் மும்பை இந்தியன்ஸ் அணியின் 12 ரன்கள் டார்கெட்டை சிறப்பாக முடித்து கொடுத்தனர். இந்த வெற்றியை அடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் முன்னேறியுள்ளது.

ராகுல் பாராட்டு

ராகுல் பாராட்டு

இந்நிலையில் முதல் சூப்பர் ஓவரை சிறப்பாக அமைத்துக் கொடுத்த முகமது ஷமிக்கு கேப்டன் கேஎல் ராகுல் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் மிகவும் தனித்துவமானவர் என்று கூறியுள்ளார். மூத்த வீரர்கள் அணிக்காக கைகோர்த்து விளையாடுவது சிறப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொறுமையாக இருப்பது அவசியம்

பொறுமையாக இருப்பது அவசியம்

புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம் அடைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ராகுல், ஒவ்வொரு வெற்றியும் ஸ்வீட்டானது என்றும் கூறியுள்ளார். வெற்றியை நோக்கி தொடர்ந்து முன்னேறுவதும் பொறுமையாக இருப்பதுமே தற்போது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, October 19, 2020, 12:03 [IST]
Other articles published on Oct 19, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+