Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டில் தொடரும் படுகாயங்களும், மரணங்களும்! ஜென்டில்மேன் விளையாட்டின் சோகம்

சென்னை: பிலிப் ஹியூக்ஸ் தலையில் காயம் பட்டு மரணமடைந்துள்ள நிலையில் கிரிக்கெட்டில் இதுபோன்ற மோசமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்துள்ளதையும் மறுக்க முடியாது. பல நேரங்களில் படுகாயங்களும், சில நேரங்களில் வீரர்களின் உயிரையும் இதுபோன்ற விபத்துகள் பறித்துள்ளன.

1932-33ல் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெர்ட் ஓல்ட்பீல்ட் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஹரோல்ட் லார்வூட் பவுன்சரால் ஏற்பட்ட காயத்தால் மண்டை ஓடு விரிசலடைந்தது. அந்த காலகட்டத்தில் பாடிலைன் எனப்படும் உடலை நோக்கி ஆக்ரோஷமாக பந்து வீசி தாக்கிக்கொள்ளும் நிலை இருந்தது.

நாரி கான்ட்ராக்டர் தப்பினார்

நாரி கான்ட்ராக்டர் தப்பினார்

1960ல் மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் சார்லி கிரிப்பித் பந்து வீச்சில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த நாரி கான்ட்ராக்டர் படுகாயத்துடன் மயக்கமடைந்து சாய்ந்தார். 6 நாட்களுக்கு சுய நினைவு திரும்பாமல் உயிருக்கு போராடிய கான்ட்ராக்டர் அதிருஷ்டவசமாக உயிர் பிழைத்தார். ஆனால், அதன்பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

நாக்கு தொண்டைக்குள் போனது

நாக்கு தொண்டைக்குள் போனது

1975ல் நியூசிலாந்தின் இவ்ன் சாட்பீல்ட் இங்கிலாந்து வீரர் பீட்டர் லிவர் வீசிய பவுன்சரால் நிலைகுலைந்தார். அந்த அதிர்ச்சியில் நாக்கு தொண்டைக்குள் சிக்கி மூச்சு திணறி உயிருக்கு போராடினார். அப்போது, இங்கிலாந்தின் பிசியோதெரப்பிஸ்ட் பெர்னார்ட் தாமஸ் தக்க நேரத்தில் முதலுதவி அளித்து அவரது உயிரை மீட்டார்.

தாடையில் அடி வாங்கியும் களமிறங்கினார்

தாடையில் அடி வாங்கியும் களமிறங்கினார்

1977ல் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்ஸ் வீசிய பந்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி மெக்கோஸ்கர் தாடையில் பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒன்றரை நாள் கழித்து காயத்துடனே மீண்டும் மட்டைவீச வந்து ஆச்சரியம் அளித்தார் ரிக்கி மெக்கோஸ்கர்.

மால்கம் மார்ஷலின் டெட்லி பவுலிங்

மால்கம் மார்ஷலின் டெட்லி பவுலிங்

1986ல் இங்கிலாந்தின் மைக் கட்டிங் மூக்கு, மேற்கிந்திய தீவுகளின் மால்கம் மார்ஷல் பவுன்சரால் உடைபட்டது.

மார்க் பவுச்சர் கண்ணில் புகுந்த பெயில்ஸ்

மார்க் பவுச்சர் கண்ணில் புகுந்த பெயில்ஸ்

2012ல் இங்கிலாந்தின் சோமர்செட் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில், கீப்பிங் செய்து கொண்டிருந்தார் தென் ஆப்பிரிக்காவின் விக்கெட் கீப்பர் மார்க் பவுச்சர். தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் வீசிய பந்தில் சோமர்சேட் பேட்ஸ்மேன் ஜீமால் போல்டு ஆனார். அப்போது ஸ்டெம்பில் இருந்த "பெய்ல்ஸ்' பவுச்சரின் கண்ணில் தாக்கியது. ரத்தம் கொட்டிய நிலையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார் பவுச்சர். இதையடுத்து அவருடைய கண்ணுக்கு 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அத்தோடு அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது.

ராமன் லம்பா மரணம்

ராமன் லம்பா மரணம்

காயம் மட்டுமின்றி துரதிருஷ்டவசமாக கிரிக்கெட்டின்போது மரணங்களும் சம்பவித்துள்ளன. 1998ம் ஆண்டு வங்கதேச லீக் கிரிக்கெட்டின்போது பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வீரர் ராமன் லம்பா மீது பேட்ஸ்மேன் மீரப் ஹுசைன் அடித்த பந்து வந்து பட்டது. காதும், நெற்றியும் சேருமிடத்தில் பந்து பட்டதால் 3 நாட்கள் கோமாவுக்கு சென்ற லம்பா, இறுதியில் உயிரிழந்தார். அவருக்கு வயது 38.

பாக். இளம் வீரர் சாவு

பாக். இளம் வீரர் சாவு

1959ல் பாகிஸ்தான் வீரர் அப்துல் அஜிஸ் நெஞ்சில் பந்து பட்டு அதே இடத்தில் இறந்தார். அவருக்கு வயது 17. இப்போது இந்த லிஸ்டில் ஹியூக்ஸ் சேர்ந்துள்ளார். இந்த சம்பவங்கள் ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட் நினைப்பதுபோல அவ்வளவு ஜென்டிலாக இல்லை என்பதை பறைசாற்றுகின்றன.

Story first published: Thursday, November 27, 2014, 12:47 [IST]
Other articles published on Nov 27, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+