Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

'சங்கு மார்க்' லுங்கி கட்டி, சிலுசிலு கண்ணாடி போட்டு... புது 'லுக்'கில் டோணி அண்ணாத்தே!

டெல்லி: மோஹாக்கை மறந்துடுங்க.. டோணி அடுத்த ஸ்டைலுக்கு மாறி பல மணி நேரமாச்சு... இப்ப அவரது ஸ்பெஷல் லுக் என்ன தெரியுமா.. கட்டம் போட்ட சங்கு மார்க் லுங்கிதான்...

ராஞ்சி, டெல்லி விமான நிலையம் பக்கம் போனோர் இந்த புதிய அவதாரத்தைப் பார்த்து வாய் பிளந்திருப்பார்கள்.

டோணி மட்டுமல்ல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் அனைவரும் விதம் விதமான லுங்கி, டிரவுசர் என போட்டு களேபரப்படுத்தியுள்ளனர். பார்த்தவுடன் குபீர் என சிரிக்கும் படியான தோற்றத்தில் காட்சி தந்தனர் சென்னை கிங்குகள்.

வாங்க அவங்களை வேடிக்கை பார்த்து விட்டு வருவோம்...

ப்ளூ கலர் லுங்கி போட்டிருக்காரு பாரு.. அவர்தான் டோணி பாண்டி...

ப்ளூ கலர் லுங்கி போட்டிருக்காரு பாரு.. அவர்தான் டோணி பாண்டி...

நல்ல நீல நிறத்திலான லுங்கியில் அப்படியே நம்ம ஊரு துரைப்பாண்டி போலவே இருந்தார் டோணி.

கீழே லுங்கி.. மேலே டிசர்ட்.. குட் செலக்ஷன்

கீழே லுங்கி.. மேலே டிசர்ட்.. குட் செலக்ஷன்

கீழே லுங்கிய கட்டிய அவர் மேலே தோதாக ஒரு காலரைத் தூக்கி விட்ட சட்டையையும், கழுத்தில் இத்தாதண்டிக்கு தொங்கிக் கொண்டிருக்கும் வகையிலான புலி மார்க் டாலரையும் போடாமல், அணியின் டிசர்ட்டைப் போட்டிருந்தார். காலில் ஷூ வேறு... சாக்ஸும்தான். ஏடாகூடமாக இருந்தாலும் எகத்தாளமாகத்தான் இருந்தது இந்த கெட்டப்பும்.

துணைக்கு சாக்ஷி

துணைக்கு சாக்ஷி

டோணியுடன் அவரது மனைவி சாக்ஷியும் காணப்பட்டார். அவர் ரொம்ப சின்னப் புள்ளைக் கணக்கில் டிரஸ் போட்டிருந்தது எக்ஸ்டிரா கண்காட்சி.

மஞ்சாக் கலரில் ரெய்னா

மஞ்சாக் கலரில் ரெய்னா

சுரேஷ் ரெய்னா பயங்கர களேபரமாக காணப்பட்டார். மஞ்சாக் கலரில் டி சர்ட்டும், கீழே கட்டம் போட்ட பைஜாமாவும் அணிந்து ரகளபுரம் ராசாவாக காணப்பட்டார்.

அல்பியும் அதேதான்

அல்பியும் அதேதான்

அல்பி மார்க்கலுக்கும் அதே போல ஒரு காடியான பைஜாமாவை போட்டு விட்டு கையில் பையுடன் நடக்க விட்டு விட்டனர்.

அஸ்வின்தான் செம !

அஸ்வின்தான் செம !

லுங்கிவாலாக்கள் பொங்கி வழியும் தமிழ்நாட்டுக்காரராக இருந்தாலும் கூட அஸ்வின் லுங்கிக்குப் போகவில்லை. மாறாக இவரும் பூப்போட்ட பைஜாமாவில் வித்தியாசமாக காணப்பட்டார். நல்லாத்தான் இருந்தது இவருக்கும் இந்த டிரஸ். அவருடன் துணைக்கு மைக்கேல் ஹஸ்ஸியும் இருந்தார். என்ன.. இவர்கள் இழுத்துச் சென்ற சூட்கேஸைப் பார்த்தபோது ஏதோ டாய்லெட்டுக்கு வாளியுடன் போவது போலவே ஒரு பீலிங்....

அப்டியே கரட்டாண்டி போல...!

அப்டியே கரட்டாண்டி போல...!

ரவீந்திர ஜடேஜாவுக்குத்தான் லுங்கி செம பொருத்தம். முறுக்கி விட்ட மீசையும், உருட்டுப் பார்வையும், சிவப்பு, கருப்பு, வெள்ளை கட்டம் போட்ட லுங்கியுமாக பஞ்சாயத்துக்குக் கிளம்பிய 'சூனா பானா' வடிவேலு மாதிரியே டெரராக இருந்தார்.

'மோஹினி' சர்மா..!

'மோஹினி' சர்மா..!

மோஹித் சர்மாவின் டிரஸ் ரொம்ப கவர்ச்சியாக இருந்தது. மேலே பார்க்காமல் காலை மட்டும் பார்த்தால், பார்ப்பவர்களுக்கு லேடீஸ் போலவே ஒரு பீலிங் வந்திருக்கும். அப்படி ஒரு கவர்ச்சி...

ஏய்யா இப்படி....?

ஏய்யா இப்படி....?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் ஏன் இந்த புதுக் கோலத்தில் காணப்பட்டனர் என்று குழப்பம் வரலாம். அதாவது, பேன்சி பேண்ட்ஸ் வாரம் என்று ஒன்றை கொண்டாடினர் சென்னை அணியினர். அதன் பொருட்டே இப்படி டிரஸ் சேஞ்ச்.

சிங்கங்களைப் பாருங்க...

சிங்கங்களைப் பாருங்க...

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேஸ்புக்கத்தி்ல்.. சூப்பர் கிங்ஸ்... பேன்சி உடையில் எங்களது சிங்கங்களைப் பாருங்கள்... நல்ல காரியத்திற்காக இந்தக் கோலம் என்று எழுதியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேஸ்புக் பக்கம் போனால் இந்தப் படங்களைப் பார்க்கலாம்....

Story first published: Tuesday, October 1, 2013, 17:37 [IST]
Other articles published on Oct 1, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+