Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பகையே நீ துள்ளாதே.. இவன் போகும் வழியில் நில்லாதே.. சிங்கம் ஒன்று புறப்பட்டதே... !

மும்பை: ஆர்த்தெழுந்தன காண் புரவிகள்.. திணந்தோள் படைத்த மறவர்களே.. திரண்டு வாருங்கள்.. திமிரோடும், திணவோடும்.. தடம் பதித்து நையப்புடைக்க எங்கள் நாயகன் ஆர்ப்பரித்து எழுந்து வருகிறான் பாருங்கள்... இப்படித்தான் மனதில் வரிகள் ஓடுகின்றன.. சச்சின் மும்பையில் தனது கடைசி டெஸ்ட்டுக்கான பிராக்டிஸ் செய்ததைப் பார்க்கும்போது.

200வது டெஸ்ட்டைக் காணும் சச்சின் தனது மகன் சகிதம் மும்பையி்ல் தனது பயிற்சியில் தீவிரமாகியுள்ளார்.

மகன் அர்ஜூன் டெண்டுல்கர் அப்பாவோடு ஒட்டியபடியும், பேசியபடியும், சிரித்தபடியும், சீரியஸாக பேசியபடியும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தந்தையுடன் நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் பயிற்சியாளருடன் கலந்து ஆலோசித்தபடி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் சச்சின்.

200வது டெஸ்ட்.. கடைசியும் கூட

200வது டெஸ்ட்.. கடைசியும் கூட

இந்தியா மேற்கு இந்தியத் தீவுகளுக்கிடையே நாளை மும்பை வாங்கடே மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இது சச்சினுக்கு 200வது டெஸ்ட் மற்றும் கடைசி கிரிக்கெட் போட்டியாகும்.

செவ்வாய்க்கிழமை முதல் பிராக்டிஸ்

செவ்வாய்க்கிழமை முதல் பிராக்டிஸ்

நேற்று முதல் சச்சின் தனது பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கூடவே மகன் அர்ஜூன் டெண்டுலகரும் மைதானத்தில் நடை போட்டு வருகிறார்.

டிக்கெட்டெல்லாம் வித்துப் போச்சுப்பா

டிக்கெட்டெல்லாம் வித்துப் போச்சுப்பா

இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் தவம் இருந்து வருகின்றனர். டிக்கெட்டெல்லாம் ஏற்கனவே விற்றுத் தீர்ந்து விட்டன.. டிக்கெட்டை விற்ற இணையதளமும் டவுன் ஆகி மீண்டெழுந்து விட்டது.

கொல்கத்தாவில் சொதப்பல்

கொல்கத்தாவில் சொதப்பல்

கொல்கத்தாவில் நடந்த 199வது டெஸ்ட் போட்டியின்போது வெறும் 10 ரன்களை மட்டுமே எடுத்தார் சச்சின். எனவே நாளைய போட்டியில் அவர் என்ன எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அன்புள்ள அப்பா...என்னப்பா

அன்புள்ள அப்பா...என்னப்பா

சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கரோடு ஜாலியாக சிரித்துக் கொண்டிருந்தபோது எடுத்த படம் இது...

பிட்ச் ரெடி.. பிச்சுக் கட்ட வாங்க சச்சின்

பிட்ச் ரெடி.. பிச்சுக் கட்ட வாங்க சச்சின்

வாங்கடே மைதானத்தின் பிட்ச் இது. இங்குதான் தனது கடைசி கிரிக்கெட் போட்டியை நாளை முதல் ஆடப் போகிறார் சச்சின்.

கோச் என்ன சொல்கிறார்...

கோச் என்ன சொல்கிறார்...

பயிற்சியாளர் டங்கன் பிளட்சருடன் சச்சின் .. ஆலோசனையில்.

அங்கிள்.. என்னையும் ஆட்டத்துக்கு சேத்துப்பீங்களா...

அங்கிள்.. என்னையும் ஆட்டத்துக்கு சேத்துப்பீங்களா...

கேப்டன் டோணியுடன், சச்சின் மகன் அர்ஜூன் ஒரு சின்ன டிஸ்கஸனில்..

கோச்சுடன் ஒரு போஸ்

கோச்சுடன் ஒரு போஸ்

பயிற்சியாளர் டங்கன் பிளட்சர், சச்சின் மற்றும் அர்ஜூன் டெண்டுல்கர்.

நாளைக்கு என்னப்பா எடுப்பீங்க...

நாளைக்கு என்னப்பா எடுப்பீங்க...

தந்தை சச்சினுடன் மகன் அர்ஜூன்.

இவ்வளவு ரன் எடுத்தா போதுமா தல...

இவ்வளவு ரன் எடுத்தா போதுமா தல...

கேப்டன் டோணியுடன், விராத் கோஹ்லி.. வாங்கடே ஸ்டேடியத்தில்.

ஊருக்கு வாங்க, வட பாயாசத்தோடு விருந்து வைக்கிறேன்

ஊருக்கு வாங்க, வட பாயாசத்தோடு விருந்து வைக்கிறேன்

சச்சின் மனைவி அஞ்சலியும், மேற்கு இந்தியத் தீவுகள் ஜாம்பவான் லாராவும், சலாம் சச்சின் நிகழ்ச்சிக்கு வருகை தந்தபோது எடுத்த படம்...

Story first published: Wednesday, November 13, 2013, 13:31 [IST]
Other articles published on Nov 13, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+