Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விருந்து கொடுத்த சச்சின்: டோணி, ஐஸ்வர்யா, கோஹ்லி, ஆமீர், அமிதாப் பங்கேற்பு

மும்பை: சச்சின் டெண்டுல்கர் அளித்த இரவு விருந்து நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

சச்சின் டெண்டுல்கர் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு விருந்து கொடுத்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

டெண்டுல்கரும் அவரது மனைவியும் விருந்துக்கு வந்தவர்களை வரவேற்றனர்.

சச்சின்

சச்சின்

மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் தனது 200வது டெஸ்ட் போட்டியை விளையாடிய சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் அளித்த விருந்துக்கு காரில் வந்த சச்சின்.

டோணி

டோணி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணி தனது மனைவி சாக்ஷியுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கோஹ்லி

கோஹ்லி

சச்சின் கொடுத்த விருந்தில் கலந்து கொள்ள காரில் வந்த இளம் வீரர் விராத் கோஹ்லி.

ஆமீர்

ஆமீர்

பாலிவுட்டின் பெர்பெக்ஷனிஸ்டான நடிகர் ஆமீர் கான் தனது மனைவி கிரண் ராவுடன் பார்ட்டிக்கு வந்தார். ஆமீரும், சச்சினும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பஜ்ஜி

பஜ்ஜி

பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சச்சின் அளித்த விருந்தில் கலந்து கொண்டார். பல சமயங்களில் சச்சின் பஜ்ஜிக்கு ஆதரவாக நின்றுள்ளார்.

யுவராஜ்

யுவராஜ்

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்து விளையாடும் யுவராஜ் சிங் பார்ட்டிக்கு வந்திருந்தார். கார் ஓட்டி வந்த அவரை புகைப்படக்காரர்கள் சூழ்ந்ததால் தான் இந்த முகபாவனை போன்று.

அமிதாப்

அமிதாப்

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சச்சின் கொடுத்த விருந்துக்கு வந்திருந்தார். சச்சினின் ஓய்வு செய்தியை கேட்டு அதிர்ந்தவர் அமிதாப்.

கங்குலி

கங்குலி

சச்சினுடன் சேர்ந்து பல காலமாக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியும் பார்ட்டிக்கு வந்திருந்தார்.

ஐஸ்

ஐஸ்

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் சச்சின் கொடுத்த விருந்தில் கலந்து கொண்டார். அம்பானி வீட்டில் நடக்கும் விருந்துகளில் சச்சினும், ஐஸ்வர்யாவும் தவறாமல் கலந்து கொள்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

சாரா

சாரா

அப்பா சச்சின் கொடுத்த விருந்தில் கலந்து கொள்ள வந்த சாரா டெண்டுல்கர்.

அபிஷேக்

அபிஷேக்

மனைவி ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து விருந்தில் கலந்து கொண்ட நடிகர் அபிஷேக் பச்சன்.

சேவாக், கம்பீர்

சேவாக், கம்பீர்

வீரேந்தர் சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் ஒரே காரில் விருந்துக்கு வந்திருந்தனர்.

அம்பானி

அம்பானி

முகேஷ் அம்பானி குடும்பத்தார் சச்சின் அளித்த விருந்தில் கலந்து கொண்டனர்.

சரத் பவார்

சரத் பவார்

மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத் பவார் விருந்தில் கலந்து கொண்டார்.

கவாஸ்கர்

கவாஸ்கர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் விருந்தில் கலந்து கொள்ள காரில் ஹோட்டலுக்கு வந்தார்.

கரண் ஜோஹார்

கரண் ஜோஹார்

பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கரன் ஜோஹார் சச்சின் அளித்த விருந்துக்கு வந்தார்.

அஸ்வின்

அஸ்வின்

சச்சின் அளித்த விருந்தில் கலந்து கொள்ள அந்தேரி ஹோட்டலுக்கு வந்த அஸ்வின்.

Story first published: Tuesday, November 19, 2013, 15:32 [IST]
Other articles published on Nov 19, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+