Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டோணி அன் கோவுக்கு எப்படி இருக்கு புது 'சொக்கா'...?

ராஜ்கோட்: இந்திய கிரிக்கெட் அணியின் சீருடையில் சின்னதாக மாற்றம் செய்து புதுப்பித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இந்த புது டிரஸ் அணிந்துதான் இந்திய வீரர்கள் விளையாடவுள்ளனர்.

புத்தம் புதிய நீல நிற ஜெர்சியில் இந்திய வீரர்கள் பளிச்சென காணப்படுகின்றனர்.

இன்றைய போட்டியில் புது சட்டையுடன்

இன்றைய போட்டியில் புது சட்டையுடன்

இன்று இரவு நடைபெறவுள்ள இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான டுவென்டி 20 போட்டியில் இந்த புது உடையில்தான் இந்திய வீரர்கள் ஆடவுள்ளனர். ராஜ்கோட்டில் இப்போட்டி நடைபெறும்.

நேற்றே அறிமுகம்

நேற்றே அறிமுகம்

புது சீருடையில் கேப்டன் டோணியும் மற்ற வீரர்களும் நேற்று ராஜ்கோட் ஸ்டேடியத்தில் வலம் வந்தனர்.

அடுத்து 7 ஒரு நாள் போட்டிகள்

அடுத்து 7 ஒரு நாள் போட்டிகள்

இன்றைய டுவென்டி 20 போட்டிக்குப் பின்னர் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளன.

சூப்பரா இருக்கு...

சூப்பரா இருக்கு...

புது உடை குறித்து கேப்டன் டோணி கூறுகையில், வீரர்கள் சீருடை தொடர்பாக பல திருத்தங்களைக் கூறியிருந்தனர். அவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, உரிய மாற்றங்களைச் செய்து இந்த உடையை வடிவமைத்துள்ளனர். இது நன்றாக இருக்கிறது என்றார்.

பார்க்கவும் ஷோக்கா கீது..

பார்க்கவும் ஷோக்கா கீது..

மேலும் அவர் கூறுகையில், புதிய உடையில் வீரர்கள் ஜம்மென்று இருக்கிறார்கல். இந்த தொடர் முழுவதும் இந்த உடையில்தான் இருக்கப் போகிறோம். தேவைப்பட்டால் உடையை வடிவமைத்துள்ள நைக் நிறுவனத்திடம் திருத்தங்களைக் கூறி அதையும் சேர்க்க முயற்சிப்போம் என்றார்.

மக்களின் வண்ணம்...

மக்களின் வண்ணம்...

தொடர்ந்து டோணி கூறுகையில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடையாது மக்கள் மனதோடு பதிந்து போன ஒன்று. இந்திய வீரர்கள் நீல நிறத்திலான உடையேயே தொடர்ந்து அணிந்து வருகின்றனர். அது பல பரிமாணங்களை இதுவரை கண்டுள்ளது. அத்தனையையும் மக்கள் அங்கீகரித்து தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தற்போது இந்திய மக்களின் வண்ணமாக மாறியுள்ளது.

இந்த டிரஸ் போட்டாலே மதிப்புதான்

இந்த டிரஸ் போட்டாலே மதிப்புதான்

இன்றைய இளைஞர்கள் கிரிக்கெட் ஆடப் போகும்போது எங்களைப் போலவே டிரஸ் போட்டுக் கொண்டு விளையாடுவது எங்களுக்கு பெரும் மரியாதையாக, கெளரவமாக, சந்தோஷமாக இருக்கிறது என்றார் டோணி.

போன மாசமே லீக் செய்த அஸ்வின்

போன மாசமே லீக் செய்த அஸ்வின்

இந்திய வீரர்களின் புதிய உடையை கடந்த மாதமே ட்விட்டர் செய்தி மூலம் லீக் செய்து விட்டார் பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

புது டிரஸ் போட்டாச்சுல்ல.. சும்மா பளிச்சுன்னு விளையாடி ஆஸ்திரேலியாவை அட்டாக் பண்ணுங்க பார்ப்போம்...!

Story first published: Thursday, October 10, 2013, 12:33 [IST]
Other articles published on Oct 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+