Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நாங்க ரெடி, நீங்க ரெடியா?: சேவாக்கிற்கு சவால் விடும் யு.கே. திமிர் பத்திரிகையாளர்

ண்டன்: இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முன்பு இங்கிலாந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லும் என ரூ.10 லட்சம் பெட்

கட்டுகிறேன் என இங்கிலாந்து பத்திரிகையாளர் பியர்ஸ் மார்கன் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாகிற்கு சவால் விட்டுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் வெறும் இரண்டு பதக்கங்களை வென்றதை இந்தியா கொண்டாடுவது அவமானமாக இல்லையா என்று இங்கிலாந்தை சேர்ந்த பத்திரிகையாளர் பியர்ஸ் மார்கன் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

Piers Morgan challenges Viru! Bets 'England will win ODI World Cup before India wins an Olympic gold'

அதை பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், நாங்கள் அனைத்து சிறிய சந்தோஷங்களையும் கொண்டாடுவோம். ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை உலகக் கோப்பை வாங்கவில்லை. இன்னும் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இது எவ்வளவு அவமானமானது? என பதிலுக்கு ட்வீட் போட்டிருந்தார்.

இந்நிலையில் பியர்ஸ் தற்போது சேவாக்கிடம் சவால் விட்டு ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

ஹாய் சேவாக், இந்தியா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முன்பு இங்கிலாந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வெல்லும் என ரூ.10 லட்சம் பெட் கட்டுகிறேன். சவாலை ஏற்கிறீர்களா? என கேட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து 444 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளதை அடுத்து மார்கன் இப்படி சவால் விட்டுள்ளார்.

Story first published: Wednesday, August 31, 2016, 9:47 [IST]
Other articles published on Aug 31, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+