For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவர் வேறு வந்துவிட்டார்.. இனிதான் சிக்கலே.. மாட்டிக்கொண்ட இந்திய அணி.. பிரச்சனை செய்யும் பிங்க் பால்

சிட்னி: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் பிங்க் பால் போட்டிகள் இந்தியாவிற்கு பெரிய அளவில் சவாலாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் இந்த வாரம் தொடங்க உள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரை இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளது.

டெஸ்ட்

டெஸ்ட்

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் பிங்க் பால் போட்டிகள் இந்தியாவிற்கு பெரிய அளவில் சவாலாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த பிங்க் பால் மற்ற பந்துகளை போல இல்லாமல் அதிகமாக ஸ்விங் ஆகிறது. மிக எளிதாக இந்த பந்துகள் ஸ்விங் ஆவதால் எளிதாக விக்கெட் விழும்.

இந்தியா விக்கெட்

இந்தியா விக்கெட்

அதேபோல் ஆஸ்திரேலிய பவுலர்கள் டெஸ்ட் போட்டிகளில் எளிதாக ஸ்விங் செய்வார்கள். பிங்க் பால் என்றால் இன்னும் எளிதாக அவர்களால் ஸ்விங் செய்ய முடியும். அதேபோல் இந்த பிங்க் பந்து போட்டிகள் இரவு பகல் போட்டிகளாக நடக்கும்.

கஷ்டம்

கஷ்டம்

7 மணிக்கு மேல் இந்த பந்துகளை வைத்து பவுலிங் செய்தால் அதை கணிப்பது மிக கடினம். பந்துகள் எந்த திசையில் செல்கிறது என்பதை எளிதாக பார்க்க முடியாது. இதனால் மாலை நேரத்தில் பேட்டிங் செய்ய வரும் வீரர்கள் பிங்க் பால் மூலம் மோசமாக கஷ்டப்பட வாய்ப்புள்ளது.

ஸ்பின்

ஸ்பின்

பிங்க் பால் மூலம் இரவு நேரத்தில் பந்துகளை எளிதாக ஸ்விங் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதான் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சிக்கலாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இதெல்லாம் போக ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு மிட்சல் ஸ்டார்க் மீண்டும் வந்துள்ளார்.

மீண்டும்

மீண்டும்

டெஸ்ட் தொடரில் இவர் பவுலிங் செய்ய உள்ளார். குடும்ப காரணங்களால் சொந்த ஊருக்கு சென்றவர் மீண்டும் ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு இவரும் திரும்புவதால் மொத்தமாக இந்திய அணிக்கு பெரிய அளவில் பிங்க் பால் மூலம் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

Story first published: Monday, December 14, 2020, 11:37 [IST]
Other articles published on Dec 14, 2020
English summary
Pink Ball may play a major role in bowling for Team India test against Australia.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+