For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பிங்க் பால் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா, வெ.இண்டீஸ்-லாம் இந்தியாவுக்கு முன்னாடியே ஆரம்பிச்சாச்சு!

Recommended Video

IND VS BAN 2ND TEST | கொல்கத்தாவில் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான ஏற்பாடுகள் தயார்

கொல்கத்தா : வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டி இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையில் வரும் 22ம் தேதி துவங்கவுள்ள நிலையில், இந்த போட்டியில் பிங்க் நிற எஸ்.ஜி பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன.

நாளை மறுதினம் துவங்கவுள்ள இந்த போட்டியில் விளையாடுவதற்காக இந்திய மற்றும் வங்க தேச அணியின் வீரர்கள் கொல்கத்தா வந்திறங்கியுள்ளனர். அவர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்முறையாக கடந்த 2015ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் தற்போது, இந்தியாவில் விளையாடப்படும் இந்தப் போட்டி சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது.

 நாளை மறுதினம் துவக்கம்

நாளை மறுதினம் துவக்கம்

இந்தியாவில் முதல்முறையாக பகலிரவு போட்டியாக இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் துவங்கி வரும் 26ம் தேதிவரை நடைபெறவுள்ளது.

 விழாக்கோலம் பூண்டுள்ள கொல்கத்தா

விழாக்கோலம் பூண்டுள்ள கொல்கத்தா

வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி முதல்முறை இந்தியாவில் நடைபெறவுள்ளநிலையில், அதை குறிக்கும்வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல்நாள் போட்டி துவக்கத்தின்போது, துணை ராணுவத்தினர், ஹெலிகாப்டர் மூலம் பந்தை இரு அணிகளின் கேப்டன்களிடம் கொடுக்க உள்ளனர்.

 ஆஸ்திரேலியா -நியூசிலாந்து மோதல்

ஆஸ்திரேலியா -நியூசிலாந்து மோதல்

உலக அளவில் கடந்த 2015ல் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் பகலிரவு போட்டிகள் அடிலெய்டில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், தற்போது 4 ஆண்டுகள் கழித்தே இந்தியா இந்த முயற்சியை கையிலெடுத்துள்ளது.

 ஆஸ்திரேலியாவின் வெற்றிமுகம்

ஆஸ்திரேலியாவின் வெற்றிமுகம்

2015க்கு பின்பு சர்வதேச அளவில் 10 பகலிரவு போட்டிகள் நடைபெற்ற நிலையில், இதில் ஐந்து முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் இந்த போட்டியில் பங்கேற்க இந்தியாவிற்கு ஆஸ்திரேலியா அழைப்பு விடுத்த நிலையில், பிசிசிஐ இதற்கு மறுப்பு தெரிவித்தது.

 கடந்த 1997ல் இரவு போட்டி

கடந்த 1997ல் இரவு போட்டி

கடந்த 1997ல் குவாலியரில் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை பர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள் இரவில் நடத்தப்பட்டன. ஆனால் இந்த போட்டியில் வெள்ளை நிற பந்துகள் பயன்படுத்தப்பட்டன.

 2000ல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது

2000ல் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது

இதனிடையே, கடந்த 2000வது ஆண்டில் பிங்க் பந்துகளை கொண்டு பகலிரவு பர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள் அந்நாட்டின் டிரினிடாட் மற்றும் டோபாகோ அணிகளுக்கிடையில் நடைபெற்றது.

 இந்தியாவின் முதல் பிங்க் பால் போட்டி

இந்தியாவின் முதல் பிங்க் பால் போட்டி

இந்நிலையில் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக சவுரவ் கங்குலி இருந்தபோது, சிஏபி சூப்பர் லீக்கின் இறுதிப்போட்டி பிங்க் பால்களை கொண்டு போட்டி நடைபெற்றது. மோஹுன் பகன் மற்றும் போவானிப்பூர் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி, மோஹுன் பகன் அணி வெற்றிபெற காரணமானார்.

 முதல்முறையாக பிங்க் எஸ்ஜி பந்துகள்

முதல்முறையாக பிங்க் எஸ்ஜி பந்துகள்

இந்நிலையில் நாளை மறுநாள் ஈடன் கார்டனில் இந்தியா -வங்கதேசம் மோதும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக பிங்க் நிற எஸ்ஜி பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன.

Story first published: Wednesday, November 20, 2019, 19:29 [IST]
Other articles published on Nov 20, 2019
English summary
Eden Garden ready for the first ever Day and Night Match in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+