For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சென்னை டெஸ்டில் ஷாக்கான கோலி.. திணறும் இந்தியா.. காரணம் திருப்பூரின் "முன்னாள் துணிக்கடைக்காரர்"!

சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக திணறுவதற்கு சென்னை பிட்ச் காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சிறப்பாக ஆடி வருகிறது. இங்கிலாந்து வீரர்கள் சிப்லி அதிரடியாக அரைசதம் அடித்து போட்டியை தொடங்கி வைக்க தற்போது ஜோ ரூட், ஸ்டோக்ஸ் மாஸ் ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்..

வரிசையாக மூன்று ஜோடிகள் 50 பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். ரூட் 150+ ரன்களையும், ஸ்டோக்ஸ் 50+ ரன்களையும் அடித்து களத்தில் உள்ளனர்.

எப்படி

எப்படி

இந்த ஆட்டத்தில் பிட்ச் முழுக்க முழுக்க பேட்டிங் செய்வதற்கு சாதகமாக உள்ளது. இதுவரை பந்து பெரிய அளவில் பவுலிங் செய்ய ஒத்துழைக்கவில்லை. முக்கியமாக ஸ்பின் பவுலிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை .

ஸ்விங்

ஸ்விங்

பந்து பெரிதாக ஸ்விங் ஆகவில்லை, பவுன்ஸ் ஆகவில்லை. கடந்த 6-8 ஓவர்களாக மட்டுமே பந்து கொஞ்சம் லேசாக பவுன்ஸ் ஆக தொடங்கி உள்ளது. பிட்ச் இப்போதுதான் பவுலிங் செய்ய சாதகமாக மாறி வருகிறது. இதுவரை இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இந்த டெஸ்ட் போட்டியில் பிட்ச் இன்னும் பேட்டிங் செய்ய சாதகமாக இருப்பதால் கோலி கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறார். ஆனால் இந்திய அணி இதற்கு தயாராக இருந்தது என்று கூறுகிறார்கள். சென்னை பிட்ச் முறையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. டெஸ்ட் போட்டிக்கு தகுந்தபடி அமைக்கப்பட்டு இருக்கிறது . அதனால்தான் ஆட்டம் அதிரடியாக செல்கிறது என்கிறார்கள்.

 டெஸ்ட் பிட்ச்

டெஸ்ட் பிட்ச்

ஒரு டெஸ்ட் பிட்ச் என்பது முதல் ஓவரில் இருந்தே பவுலிங் பிட்சாக இருக்க கூடாது. போக போக பவுலிங் பிட்ச் போல மாற வேண்டும். சென்னை பிட்ச் அப்படித்தான் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. சென்னையை பிட்ச் போக போக மாயங்களை நிகழ்த்தும் என்று கூறுகிறார்கள்.

காரணம்

காரணம்

இந்த பிட்சை சிறப்பாக டெஸ்ட் போட்டிக்கு ஏற்றபடி வடிவமைத்த தமிழர் வி ரமேஷ் குமார்தான் இதற்கு காரணம். சென்னை சேப்பாக்கத்தில் தற்போது போட்டி நடக்கும் பிட்சை இவர்தான் வடிவமைத்தவர். திருப்பூரை சேர்ந்த இவர் முன்னாள் பிஸ்னஸ் மேன். பெரிய அளவில் துணிக்கடைகளை இவர் நடத்தி வந்து இருக்கிறார்.

ஆர்வம்

ஆர்வம்

ஜவுளித்துறையில் வெற்றிபெற்ற ரமேஷ் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் காரணமாக பிட்ச் வடிவமைப்பில் இறங்கினார். பிசிசிஐ அமைப்பின் முறையான பிட்ச் மேக்கிங் படிப்பை படித்துவிட்டு இவர் முதல்தர போட்டிகளில் பிட்ச் வடிவமைத்தார். இதில் ரமேஷ் முறையாக பயிற்சிகளை பெற்றுள்ளார்.

எங்கு

எங்கு

திருப்பூர், சேலம், கோவையில் நடந்த கிரிக்கெட் போட்டிகள் போட்டிகள், அண்டர் 16, 19, 23 போட்டிகள் பலவற்றில் இவர் பிட்ச் வடிவமைத்தார் . இதன் காரணமாக தற்போது இங்கிலாந்துக்கு எதிரான சென்னை டெஸ்டில் ரமேஷ் பிட்ச் வடிவமைத்துள்ளார். இவரின் திறமை பார்த்து இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது .

ஜனவரி

ஜனவரி

கடந்த ஜனவரியில்தான் பிட்ச் வடிவமைக்க வேண்டும் என்று இவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதன்பின் துல்லியமாக திட்டமிட்டு இந்த சேப்பாக்கம் பிட்சை ரமேஷ் வடிவமைத்துள்ளார். இங்கிலாந்து பிட்ச் போல, பிசிறு இல்லாமல், துல்லியமாக ரமேஷ் உருவாக்கி இருக்கும் பிட்ச் இந்த போட்டியில் கேம் சேஞ்சாராக மாறியுள்ளது.

Story first published: Saturday, February 6, 2021, 15:51 [IST]
Other articles published on Feb 6, 2021
English summary
Pitch Curator Ramesh Kumar played a beautiful role in changing the Chennai pitch for England vs India test.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+