Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உஷாரான இங்கிலாந்து.. 2வது டெஸ்டில் இந்தியாவுக்கு ஆப்பு.. ஸ்பெஷலாக தயாராகும் லார்ட்ஸ் பிட்ச் - விவரம்

லார்ட்ஸ்: முதல் போட்டியில் இந்திய அணி அபாரமாக பந்துவீசிய நிலையில் 2வது டெஸ்டில் அதற்கு ஆப்பு வைக்கும்படி பிட்ச் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்த சூழலில் ஆட்டம் டிராவானது.

இரு அணிகளுக்கும் இடையே நாட்டிங்கமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், இந்திய அணி வெற்றிக்கு 157 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் ரத்தானது. இதனால் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்தியாவிடம் 9 விக்கெட்டுகள் கைவசம் இருந்த போதும், மழை வந்து அருமையான வெற்றிவாய்ப்பை தட்டிப்பறித்தது.

2வது டெஸ்ட் போட்டி

2வது டெஸ்ட் போட்டி

முதல் போட்டி ஏமாற்றம் கொடுத்ததால் தற்போது 2வது டெஸ்ட் போட்டியின் பக்கம் ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 12ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டிக்காக கடுமையான பிட்ச் ரெடி ஆகியுள்ளது.

லார்ட்ஸ் மைதான பிட்ச்

லார்ட்ஸ் மைதான பிட்ச்

போட்டி நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் அதிகப்படியான புற்கள் இருக்கும்படி பிட்ச் அமைக்கப்பட்டுள்ளது. பிட்ச் இப்படி இருந்தால், அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக விளங்கும். முதல் டெஸ்ட் போட்டியில் ஓரளவிற்கு புற்கள் இருப்பது போன்று இங்கிலாந்துக்கு சாதகமாக தான் பிட்ச் தயார் செய்யப்பட்டது. ஆனால் அந்த களத்திலும் ரன்களை குவிக்க அந்த அணி தவறிவிட்டது. இதனால் இந்த முறை இன்னும் புற்கள் அதிகமாக்கப்பட்டுள்ளது.

அந்த மூவர்

அந்த மூவர்

இந்திய அணி சுழற்பந்துவீச்சில் தான் அதிக பலம் கொண்டது என்ற பேச்சு உள்ளது. ஆனால் கடந்த டெஸ்ட் போட்டியில் அந்த பேச்சுக்களுக்கு கடும் பதிலடி கொடுத்தனர் இந்திய அணியின் ஸ்டார் பவுலர்களான முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ். இங்கிலாந்தில் நல்ல அனுபவம் கொண்ட இஷாந்த் காயத்தினால் பாதிக்கப்பட்டதால் சிராஜுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் விடுத்தார்.

முதல் டெஸ்ட் ஸ்கோர்

முதல் டெஸ்ட் ஸ்கோர்

முதல் டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 278 ரன்கள் எடுத்தது. பிறகு இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்ஸில் கேப்டன் ஜோ ரூட் சதம் மூலமாக 303 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து அனுபவம் வாய்ந்த பவுலர்களை வைத்திருந்தாலும், இந்த இலக்கை இந்தியா சுலபமாக எட்டிப்பிடித்திருக்கும் எனினும் மழைக்குறுக்கிட்டு வெற்றி வாய்ப்பு தவறியது. 2வது டெஸ்டிலும் அப்படி மழைபாதிப்பு இருக்காது எனக்கூறப்படுகிறது.

Story first published: Tuesday, August 10, 2021, 20:25 [IST]
Other articles published on Aug 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+