ஹர்பஜன் சிங்கை கழற்றி விட்ட அணிகள்... பியூஷ் சாவ்லா ரூ. 2.4 கோடிக்கு ஏலம்
சென்னை : சிஎஸ்கேவில் இருந்து விடுவிக்கப்பட்ட லெக்-ஸ்பின்னர் பியூஷ் சாவ்வா ஐபிஎல் 2021 சீசனுக்காக மும்பை இந்தியன்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.
இன்றைக்கு நடந்துள்ள ஐபிஎல் 2021 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை 2.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

இன்றைய ஐபிஎல் ஏலத்தில் 292 வீரர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இதில் ஹர்பஜன் சிங் ஏலத்தில் எடுக்கப்படவில்லை.
ஐபிஎல் 2021 சீசனுக்கான ஏலம் செனைனயில் சிறிய அளவில் நடைபெற்று வருகிறது. இதில் 292 வீரர்கள் பங்கேற்ற நிலையில், இளம் வீரர்களுக்கும் இந்த போட்டியில் கிராக்கி காணப்பட்டது. இந்நிலையில் சிஎஸ்கே அணியால் விடுவிக்கப்பட்ட பியூஷ் சாவ்லாவை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் தங்களது அணிக்கு லெக் ஸ்பின்னர் தேவை உள்ள நிலையில் பியூஷ் சாவ்லாவை 2.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால் சிஎஸ்கே அணியால் விடுவிக்கப்பட்ட ஹர்பஜன் சிங் இந்த எலத்தில் எடுக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications