Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டியை தலைகீழாக மாற்றி வெற்றி பெற்ற தமிழ் தலைவாஸ்.. பாட்னாவை துவைத்து எடுத்த புனேரி!

பாட்னா : 2019 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி மிகச் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

மற்றொரு போட்டியில் புனேரி பல்தான் அணி பாட்னா பைரேட்ஸ் அணியை ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி பெற்றது.

PKL 2019 : Tamil Thalaivas beat Haryana Steelers while Puneri Paltan won Patna Pirates

தமிழ் தலைவாஸ் - ஹரியானா ஸ்டீலர்ஸ் மோதிய போட்டியின் முதல் பாதி முழுவதும் ஹரியானா அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பத்து நிமிடங்களில் அந்த அணி 10 - 4 என முன்னிலையில் இருந்தது.

முதல் பாதி முடிவில் ஹரியானா அணி 19 - 10 என்ற அளவில் தமிழ் தலைவாஸ் அணியை விட முன்னிலையில் இருந்தது. தமிழ் தலைவாஸ் வெற்றி பெறுவது கடினம் என்ற நிலையே இருந்தது.

இரண்டாம் பாதியின் கடைசி ஆறு நிமிடங்கள் வரை தமிழ் தலைவாஸ் அணி பின்தங்கியே இருந்தது. எனினும், அனுபவ ரெய்டர்கள் அஜய் தாக்குர், ராகுல் சௌதாரி அணியை காப்பாற்றினர். போட்டியின் முடிவில் தமிழ் தலைவாஸ் 35 - 28 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் புனேரி பல்தான் அணி இந்த சீசனின் முதல் வெற்றியை பதிவு செய்தது. கடந்த போட்டியில் தன் சொந்த மண்ணில் தோற்ற பாட்னா மீண்டும் தோல்வி அடைந்தது.

புனேரி அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் டேக்கில் தான். டேக்கில் மூலம் மட்டுமே 17 புள்ளிகள் கிடைத்தது. போட்டியின் முடிவில் 41 - 20 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது புனேரி பல்தான்.

Story first published: Monday, August 5, 2019, 1:01 [IST]
Other articles published on Aug 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+