Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PKL 2025: கடைசி 10 நிமிடத்தில் நிகழ்ந்த பரபரப்பு.. முதல் ஆட்டத்திலேயே சாதித்த தமிழ் தலைவாஸ்

விசாகப்பட்டினம்: புரோ கபடி லீக் 12வது சீசனில் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி விசாகப்பட்டினத்தில் பலப் பரிட்சை நடத்தியது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி மூன்று புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரை தொடங்கியுள்ளது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு வீரர்களும் அபாரமாக செயல்பட்டனர். முதல் ஐந்து நிமிடத்தில் இரு அணிகளும் தலா நான்குக்கு நான்கு என்ற ஸ்கோரில் இருந்தது. இந்த தருணத்தில் தமிழ் தலைவாஸ் அணி கொஞ்சம் சரிவை சந்திக்க தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஸ்கோரில் முன்னிலை பெற்றது.

Tamil Thalaivas beat Telugu Titans

தமிழ் தலைவாஸ் ஒவ்வொரு புள்ளிகளை பெற முயற்சி செய்த போதெல்லாம், தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளிகளை வாரி குவித்தது. ஒரு கட்டத்தில் முதல் பாதி முடிவில் தமிழ் தலைவாஸ் 14க்கு 13 என்ற கணக்கில் இருந்தது. இதை அடுத்து இரண்டாவது பாதி தொடங்கிய போது தெலுங்கு டைட்டன்ஸ் அணி புள்ளிகளை வாரி குவித்தது.

இதனால் தமிழ் தலைவாஸ் அணி தடுமாறியது. ஒரு கட்டத்தில் தெலுங்கு அணி 20 புள்ளிகளையும், தமிழ் தலைவாஸ் அணி 15 புள்ளிகளையும் தான் பெற்றிருந்தது. தமிழ் தலைவாஸ் அணி எவ்வளவு போராடியும் புள்ளி வித்தியாசத்தை குறைக்க முடியவில்லை. தமிழ் தலைவாஸ் அணி 20 புள்ளிகளை பெறும்போது எல்லாம் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 25 புள்ளிகளை பெற்றது.

இந்த தருணத்தில் ஆட்டத்தின் கடைசி 10 நிமிடங்களில் தமிழ் தலைவாஸ் அணி தங்களுடைய அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை அடுத்தடுத்து குவித்தது. போட்டி முடிய வெறும் 4 நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் தமிழ் தலைவாஸ் அணி 31 புள்ளிகளை பெற்று தெலுங்கு டைட்டன்ஸ் விட இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தது.

வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில் கடைசி சில நிமிடங்களில் அபாரமாக செயல்பட்டு தமிழ் தலைவாஸ் 38க்கு 35 என்ற புள்ளிகளில் பெற்று வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டியில் பின்தங்கி இருந்த நிலையில் அபாரமாக வென்றது. தமிழ் தலைவாஸ் அணியில் அர்ஜுன் தேஷ்வால் அதிகபட்சமாக 12 புள்ளிகளையும், பவன் சேரவாத் ஒன்பது புள்ளிகளையும் பெற்றனர்.

தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் பரத் அதிகபட்சமாக 11 புள்ளிகளையும் விஜய் மாலிக் 6 புள்ளிகளையும் பெற்றனர். தமிழ் தலைவாஸ் அணி அடுத்ததாக மும்பை அணியை வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு ஆவது குறிப்பிடத்தக்கது

Story first published: Friday, August 29, 2025, 21:39 [IST]
Other articles published on Aug 29, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+