
5 ரன்களில் அவுட்டான வார்னர்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று துவங்கியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் 4வது ஓவரிலேயே 5 ரன்களை அடித்திருந்த நிலையில் அவுட்டானார்.

முதல் போட்டியில் அவுட்
இன்றைய ஆட்டத்தின்போது இடையிடையே மழை குறுக்கிட்ட நிலையில், ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை ஆஸ்திரேலிய அணி அடித்திருந்தது. அந்த அணியின் வில் புகோவ்ஸ்கி 62 ரன்களை அடித்திருந்த நிலையில், இந்த போட்டியின் மூலம் தனது முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய நவ்தீவ் சைனி அவரை அவுட்டாக்கினார்.

புகோவ்ஸ்கியை வீழ்த்த திட்டம்
இந்நிலையில் துவக்க வீரர் டேவிட் வார்னரை 5 ரன்களில் வீழ்த்திய முகமது சிராஜ், ஷார்ட் பந்துகளை போட்டு புகோவ்ஸ்கியை வீழ்த்த அணி திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆஸ்திரேலியா ஏ அணி போட்டியின்போதும் அவர் அந்த பந்துகளை தவறவிடாத நிலையில் அந்த பந்துகளை போட்டு அவரை அவுட்டாக்க திட்டமிட்டதாக குறிப்பிட்டார்.

இயல்பானது -சிராஜ்
இதனிடையே ரிஷப் பந்த் தவறவிட்ட கேட்ச்கள் குறித்து குறிப்பிட்ட சிராஜ், இது போட்டியில் இயல்பாக நடப்பதுதான் என்று தெரிவித்தார். இதுகுறித்து வேதனை அடையாமல் அடுத்த பந்தை நோக்கி செல்வதே பௌலருக்கு சிறப்பானது என்றும் அவர் கூறினார். டெஸ்ட் போட்டி என்பதே பொறுமையாக ஆடப்படுவது என்றும், பௌலர்களின் பொறுமை இதில் சோதனைக்கு உள்ளாகும் என்றும் அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











