Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியை காலி பண்ண அதிரடி திட்டம் தயார்.. சொல்லி அடிக்க காத்திருக்கும் இங்கிலாந்து வீரர்

எக்பாஸ்டன்: இந்திய அணி எங்களை வீழ்த்தினால் அவர்கள் சூப்பர் ஸ்டார்கள் என்றும், கோலி விக்கெட்டை எடுக்க தயார் என்றும் இங்கிலாந்து வீரர் மொயின் அலி கூறியிருக்கிறார்.

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டி மழையால் ரத்தானது.

இந்திய அணி 11 புள்ளிகளுடன் கிட்டத்தட்ட அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக இந்தியா இன்று இங்கிலாந்து அணியை எதிர் கொள்கிறது.

2 அணிகளுக்கும் முக்கியம்

2 அணிகளுக்கும் முக்கியம்

2 அணிகளுக்குமே இந்த போட்டி முக்கியமான ஒன்று. ஏனெனில் கோப்பையை கைப்பற்றும் அணி என்று இந்த 2 அணிகளும் கருதப்படும் போட்டிக்கான வரவேற்பு அதிகரித்து உள்ளது.

விக்.தடுமாற்றம்

விக்.தடுமாற்றம்

இந்நிலையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டரான மொயின் அலி இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் இந்திய அணி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: இந்த தொடரில் கோலியின் விக்கெட்டை எடுக்க பலரும் தடுமாறுவதை பார்த்து வருகிறோம்.

எளிதாக அவுட்டாக்குவேன்

எளிதாக அவுட்டாக்குவேன்

அவரை வீழ்த்துவது சற்று கடினம். ஆனாலும், அவரை இன்றைய போட்டியில் அவரை நான் எளிதாக வீழ்த்துவேன். கோலியை வீழ்த்தி விட்டால் இந்திய அணியை எளிதாக வீழ்த்திவிடலாம்.

இங். பக்கபலம்

இங். பக்கபலம்

மேலும் போட்டியில் எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிக அளவில் இருக்கும் என்பதால் எங்களுக்கு அது பக்கபலம் தான். இந்திய அணிக்கு அது சற்று நெருடலாக தான் இருக்கும்.

நீங்கள் தான் சூப்பர் ஸ்டார்

நீங்கள் தான் சூப்பர் ஸ்டார்

இந்த முக்கிய போட்டியில் இந்திய அணி எங்களை வீழ்த்தினால் அவர்கள் சூப்பர் ஸ்டார்களாக இந்தியாவுக்கு திரும்புவார்கள். இல்லையெனில் அவர்களது நாட்டு ரசிகர்கள் அவர்களை வசை பாடுவார்கள் என்றார். அனைத்து ரக போட்டிகளிலும், கோலியை, 6 முறை அவுட்டாக்கி இருக்கிறார் மொயின் அலி என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 30, 2019, 8:42 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+