For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த வாரத்துல இருந்து வீரர்களின் தனிப்பட்ட பயிற்சி ஆரம்பம் -இசிபி திட்டம்

லண்டன் : இங்கிலாந்து வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை அடுத்த வாரத்தில் இருந்து துவக்க உள்ளதாக இசிபி மேலாண்மை இயக்குநர் ஆஷ்லி கில்ஸ் தெரித்துள்ளார்.

முதல்கட்டமாக பௌலர்களுக்கும் பின்னர் பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர்களுக்கும் தனிப்பட்ட முறையில் பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயிற்சிகள் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்வதைவிடவும் மிகவும் பாதுகாப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

யப்பா சாமி முடியலை.. பெரிய பெரிய கேப்டன்களையும் மேட்ச்சுக்கு முன்பே கதற வைத்த கங்குலி டெக்னிக்!யப்பா சாமி முடியலை.. பெரிய பெரிய கேப்டன்களையும் மேட்ச்சுக்கு முன்பே கதற வைத்த கங்குலி டெக்னிக்!

தனிப்பட்ட முறையில் பயிற்சி

தனிப்பட்ட முறையில் பயிற்சி

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு அடுத்த வாரத்தில் இருந்து தனிப்பட்ட முறையில் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளதாக இசிபி மேலாண்மை இயக்குநர் ஆஷ்லி கில்ஸ் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சிகள் ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்வதை காட்டிலும் மிகவும் பாதுகாப்பானது என்றும் அவர் கூறியுள்ளார்.

வீரர்களை தயார்படுத்த பயிற்சி

வீரர்களை தயார்படுத்த பயிற்சி

இங்கிலாந்தில் கொரோனா காரணமாக ஜூலை 1ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, அயர்லாந்து ஆகிய நாடுகளுடன் இங்கிலாந்து அணி கிரிக்கெட் தொடர்களை திட்டமிட்டுள்ளன. முன்னதாக வீரர்களை உடலளவிலும் மனதளவிலும் தயார்படுத்த இந்த தனிப்பட்ட பயிற்சிகள் உதவம் என்று கில்ஸ் கூறியுள்ளார்.

மே.இ. தீவுகள் அணி தயக்கம்

மே.இ. தீவுகள் அணி தயக்கம்

கொரோனாவால் இங்கிலாந்தில் இதுவரை 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு ஜூலை மாதத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தங்களது வீரர்கள் தயக்கம் காட்டுவதாக மேற்கிந்திய கிரிக்கெட் தலைமை நிர்வாகி ஜானி கிரேவ் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது கேள்விகளை மனதில் கொண்டு, இங்கிலாந்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக கில்ஸ் தெரிவித்துள்ளார்.

முதலில் பௌலர்களுக்கு பயிற்சி

முதலில் பௌலர்களுக்கு பயிற்சி

இந்த பயிற்சியில் 30 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களின் பட்டியலை இசிபி இன்னும் வெளியிடவில்லை. முதல்கட்டமாக பௌலர்கள் இரு வாரங்களுக்கும் தொடர்ந்து பேட்ஸ்மேன்கள் மற்றும் விக்கெட் கீப்பர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் அளிக்கப்படும் இந்த பயிற்சியில் ஒரு பயிற்சியாளர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Story first published: Friday, May 15, 2020, 15:36 [IST]
Other articles published on May 15, 2020
English summary
The ECB announced plans to restart players' individual training next week
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X