சதம் அடித்தவர்களுக்கும், 5 விக்கெட் எடுத்தவருக்கும் தராமல் வேறு ஒரு வீரருக்கு ஆட்டநாயகன் விருது
அடிலெய்ட் : இந்த டெஸ்டில் மொத்தம் மூன்று வீரர்கள் சதங்கள் எடுத்தனர்.
ஒரு வீரர் மொத்தம் வீழ்த்திய விக்கெட்டுக்கள் 8
வேறு ஒரு வீரர் மொத்தம் வீழ்த்திய விக்கெட்டுக்கள் 6.
ஆனால் ஒருவருக்கும் ஆட்ட நாயகன் விருது அளிக்கப் படவில்லை.
இரண்டு வீரர்கள் எடுத்த ரன்கள் தலா 95.அதில் ஒருவரான மேற்கு இந்திய வீரர் கீத் பாயிஸ்க்கு அளிக்கப் பட்டது ஆட்ட நாயகன் விருது.
இந்த டெஸ்டில் அவரது மேற்கு இந்திய தீவுகள் அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சதம் அடித்தவர்கள் இருந்தும், அதிக விக்கெட்டுக்கள் எடுத்த வீரர்கள் இருந்தும், 95 ரன்கள் எடுத்த வீரர் இருந்தும், கீத் பாயிஸ்க்கு விருது கிடைத்ததற்கு முக்கிய காரணம் அவரது ஆல் ரவுண்டர் திறமையின் வெளிப்பாடு ஆகும்.

சதம் எடுத்த வீரர்கள் விவரம்
ஆஸ்திரேலிய வீரர்
இயன் ரெட் பாத் 103 ரன்கள். ( எதிர் கொண்ட பந்துக்கள் 175. 6 x 4.
2 x 6 )
ஆஸ்திரேலிய வீரர்
அலன் டர்னர் 136 ரன்கள். ( எதிர் கொண்ட பந்துக்கள் 222. 15x4. )
மேற்கு இந்திய வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் 101 ரன்கள். ( எதிர் கொண்ட பந்துக்கள் 156. 17 x 4 )
சதம் தவற விட்ட இரண்டு வீரர்கள்
ஆஸ்திரேலிய வீரர்
காரி கில்மவுர் 95 ரன்கள். ( எதிர் கொண்ட பந்துக்கள் 94. 12 x 4.
1 x 6 )
மேற்கு இந்திய தீவுக்கள் அணி வீரர் கீத் பாயிஸ் 95 ரன்கள். ( எதிர் கொண்ட பந்துக்கள் 105 . நாட் அவுட். 12 x 4. )
இரண்டாவது இன்னிங்சில் 69 ரன்கள்
( எதிர் கொண்ட பந்துக்கள் 81. 11 x 4. )
பவுலிங்கில் எடுத்த விக்கெட் 1.
ஸ்கோர்
ஆஸ்திரேலிய அணி
418
345/7 டிக்ளர்
மேற்கு இந்திய தீவுகள் அணி
274
299
இந்த டெஸ்ட் மேட்ச் அடிலேய்ட் மைதானத்தில்
ஜனவரி, 1976 ல்
நடைப் பெற்றது.
வாசுதேவன், பெங்களூரு


Click it and Unblock the Notifications