Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புது விதிகளைப் புகுத்திய ஐசிசி.... ரூல்ஸ் தெரியாமலே விளையாடியது இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் !

ராஞ்சி : ராஞ்சியில் நேற்றுநடைபெற்ற டி -டுவென்டி போட்டியில் ஐசிசியால் சில புதிய விதிகள் புகுத்தப்பட்டது. ஐசிசி விதிகளில் செய்த மாற்றங்கள் எதுவுமே தெரியாமல் இந்தியா , ஆஸ்திரேலியா என இரு அணிகளும் நேற்றைய ஆட்டத்தை ஆடி இருக்கின்றன.

ஆட்டத்தில் பல இடங்களில் குழப்பங்கள் ஏற்பட்டதாக வீரர்கள் தெரிவித்துள்ளனர். ஆட்டம் முழுக்கவே ஒரு புரியாத மனநிலையுடன் விளையாடியதாக போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர் தவான் தெரிவித்தார் .

 டி-டுவென்டியிலும் இந்தியா வெற்றி

டி-டுவென்டியிலும் இந்தியா வெற்றி

ராஞ்சியில் நேற்று இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் டி-டுவென்டி போட்டி நடை பெற்றது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 18 ஓவர் மற்றும் 4 பந்துகளுக்கு 118 ரன்கள் எடுத்திருந்தது . இதையடுத்து ஆட்டம் மழையால் தடைபெற்றது. அதன்பின் டக் வொர்த் லிவிஸ் முறைப்படி 6 ஓவராக குறைக்கப்பட்ட ஆட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்து இந்தியா அபாரமாக வெற்றிப் பெற்றது.

 எத்தனை ஓவர்

எத்தனை ஓவர்

இந்த ஆட்டத்தின் மத்தியில் வீரர்களுக்கு நிறைய குழப்பங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் ஐசிசி சில புதிய விதிகள் புகுத்தி இருந்தது. அதன்படி மழையால் ஆட்டத்தின் ஓவர்கள் 10 க்கும் குறைவாக குறைக்கப்பட்டால் , பவுலர்கள் கண்டிப்பாக 2 ஓவர்கள் போட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்த விதி ஆஸ்திரேலியாவுக்கு தெரியாததால் ஒரு பவுலருக்கு மட்டும் இரண்டு ஓவர்கள் கொடுத்துவிட்டு மற்ற நான்கு ஓவர்களை வெவ்வேறு பவுலர்களுக்கு கொடுத்துள்ளது.

 ரிவ்யூ இருப்பதே தெரியாது

ரிவ்யூ இருப்பதே தெரியாது

அதேபோல் இந்த ஆட்டத்தில் இருந்து டி-டுவென்டி போட்டியிலும் ரிவியூ கேட்கலாம் என அறிவித்திருந்தது ஐசிசி . ஆனால் இந்த விதி இருப்பதும் தெரியாமல் இரண்டு அணிகளும் விளையாடி இருக்கின்றன. ஆட்டம் முடிவதற்கு ஒரு ஓவருக்கு முன்புதான் ஆஸ்திரேலியாவுக்கு ரிவ்யூ சிஸ்டம் இருப்பதே தெரியவந்துள்ளது.

 போட்டிக்குப் பின் தாவன் பேட்டி

போட்டிக்குப் பின் தாவன் பேட்டி

விதிகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக உண்டான குழப்பம் பற்றி தவான் பேசிய போது " எங்களை விட ஆஸ்திரேலிய அணியே விதிகள் மாற்றத்தால் அதிகம் குழப்பம் அடைந்தது . வெவ்வேறு பவுலர்களை ஆஸ்திரேலியா பயன்படுத்தியது எங்களுக்கு கஷ்டமாக இருந்தது . போட்டி முடிந்த பின்தான் எங்களுக்கு அனைத்து விதிகளும் மாறியிருப்பது தெரிந்தது " என்றார் .

Story first published: Sunday, October 8, 2017, 17:18 [IST]
Other articles published on Oct 8, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+