கோஹ்லி, பும்ரா, ஸ்டூவர்ட் பிராட், பந்த், பட்லர்.. 3வது டெஸ்ட் போட்டியின் சாதனையாளர்கள்!
Recommended Video

3வது டெஸ்ட் போட்டியின் சாதனையாளர்கள் இவர்கள் தான்!- வீடியோ
ட்ரெண்ட்பிரிட்ஜ் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ட்ரெண்ட்பிரிட்ஜில் நடைபெற்றது.
இந்திய அணி இங்கிலாந்து அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இப்போட்டியில் வீரர்கள் புரிந்த சில சாதனைகள் விவரம்.

விராட் கோஹ்லி :
இந்திய கேப்டன்களில் அதிக வெற்றிகளை பெற்ற இரண்டாவது கேப்டன்.
டெஸ்ட் போட்டிகளில் தனது 23ஆவது சதத்தை அடித்தார்.
பும்ரா :
பும்ரா இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
4 டெஸ்ட் போட்டிகளில் 2வது முறையாக 5 விக்கெட்களை வீழ்த்தினார்
இஷாந்த் சர்மா :
டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் குக்கை 11 ஆவது முறையாக வீழ்த்தினார்.
ஒரு வீரரை அதிக முறை வீழ்த்திய இந்திய வீரர்கள் வரிசையில் இரண்டாமிடம்
ரிஷப் பந்த்:
அறிமுக வீரர் ரிஷப் பந்த் டெஸ்ட் போட்டிகளில் சிக்ஸர் அடித்து தனது ரன் கணக்கை துவங்கினார்.
சிக்ஸர் அடித்து ரன் கணக்கை துவங்கிய முதல் இந்திய வீரர்.
பந்த் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மொத்தம் 7 கேட்ச்களை பிடித்துள்ளார்.
அறிமுக போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த இந்திய விக்கெட்கீப்பர்
ஹார்டிக் பாண்டியா:
ஹார்டிக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டை வீழ்த்தினார்.
டெஸ்ட் போட்டிகளில் 500 ரன்களையும் கடந்தார்.
பட்லர் :
இங்கிலாந்து வீரர் பட்லர் டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது சதத்தை அடித்தார்.
இந்த போட்டியில் அவர் டெஸ்ட் போட்டிகளில் 1000 ரன்களை கடந்தார்.
ஸ்டுவர்ட் பிராட் :
ஸ்டுவர்ட் பிராட் டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களை கடந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 400+ விக்கெட்கள் மற்றும் 3000 ரன்களை கடந்த ஐந்தாவது வீரர்
Story first published: Thursday, August 23, 2018, 11:42 [IST]
Other articles published on Aug 23, 2018


Click it and Unblock the Notifications