Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடவுளே இன்னிக்காச்சும் விளையாட சான்ஸ் கிடைக்கணுமே.... பிரார்த்தனை செய்யும் ஐபிஎல் வீரர்கள்

டெல்லி: ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாட இன்னிக்காவது சான்ஸ் கிடைக்குமா என 8 அணிகளைச் சேர்ந்த 57 பேர் தொடர்ந்து காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் நடந்து வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 51 நாள்களில் 60 ஆட்டங்கள் நடக்க உள்ளன. இதுவரை 25 நாள்களில் 30 ஆட்டங்கள் முடிந்துள்ளன.

Players waiting to play in the IPL

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீண்டும் திரும்பியுள்ளதால், இந்த ஆண்டு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நடந்தது. அதன்படி, 8 அணிகளும் சேர்ந்து 189 வீரர்களை தேர்வு செய்துள்ளன. மிகவும் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் தலா 26 வீரர்களை தேர்வு செய்தன.

இதுவரை 25 நாள்களில் 30 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதில், 189 வீரர்களில் 57 பேர் இதுவரை களத்தில் இறங்கவில்லை. இன்றைக்காவது வாய்ப்பு கிடைக்குமா என, இவர்கள் காத்திருக்கின்றனர். மேலும் 26 நாள்களில் 30 போட்டிகள் நடக்க உள்ளதால், அதில் இவர்களில் சிலருக்கு விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே சார்பில் லுங்கி நிகிடி, கேஎம் ஆசிப் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.

மும்பை அணியில் அதிகபட்சமாக 10 பேரும், சிஎஸ்கே, டெல்லி, ஹைதராபாத் அணிகளில் தலா 8 பேரும் பெஞ்சில் உள்ளனர். ஒவ்வொரு அணியிலும் வாய்ப்புக்காக காத்திருக்கும் வீரர்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் - சைத்தன்யா பிஷ்னோய், நாராயண் ஜெகதீசன், ஷிதிஸ் சர்மா, மோனு குமார், மிட்செல் சேன்ட்னர், கனிஷ்க் சேத், துருவ் ஷோரி, டேவிட் வில்லி. டெல்லி டேர்டெவில்ஸ் - அபிஷேக் சர்மா, ஜூனியர் டாலா, சயான் கோஷ், குர்கீரத் மான் சிங், சந்தீப் லாமிச்சானே, மனோஜ் கால்ரா, நமன் ஓஜா, ஜயந்த் யாதவ்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - பென் டுவார்ஷூயிஸ், அக் ஷ்தீப் நாத், மயாங்க் தாகர், பிரதீப் சாகு, மன்சூர் தர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஜாவன் சியர்லெஸ், இஷாங்க் ஜக்கி, கேமரான் டெல்போர்ட், அபூர்வ் வாங்கடே, பிரசித் கிருஷ்ணா. மும்பை இந்தியன்ஸ் - தஜிந்தர் சிங், சரத் லும்பா, மோஷின் கான், முகமது நிதேஷ், ஆதித்யா தாரே, சவுரப் திவாரி, ஆடம் மில்னே, ராகுல் சாகர், சித்தேஷ் லாட், அங்குல் ராய்.

ராஜஸ்தான் ராயல்ஸ் - அங்கித் சர்மா, துஷ்மந்தா சமீரா, சுதேசன் மிதுன், பிரசாந்த் சோப்ரா, ஜதின் சக்சேனா, அனுரீத் சிங், ஆர்யமான் பிர்லா. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மோஷின் அலி, பார்த்திவ் படேல், நவ்தீப் சைனி, அனிருத்தா ஜோஷி, அனிகெட் சவுத்ரி, பவன் தேஷ்பாண்டே. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - தன்மே அகர்வால், கலீல் அகமது, பிபுல் சர்மா, கார்லோஸ் பிராத்வொயிட், ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, மெஹ்தி ஹாசன், டி நடராஜன், சச்சின் பேபி.

Story first published: Tuesday, May 1, 2018, 15:27 [IST]
Other articles published on May 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+