For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனிமே இந்த 11 பேர்தான்.. ஒரே போடு போட்ட கோலி.. மொத்தமாக ஓரம்கட்டப்பட்ட வீரர்கள்.. எல்லாம் போச்சு!

சிட்னி; இந்திய அணியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆட போகும் வீரர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கும் இடையிலான பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் 17ம் தேதி இரண்டு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.

தற்போது டெஸ்ட் போட்டிக்கு தயார் ஆகும் வகையில் இன்று இந்திய அணிக்கும், ஆஸ்திரேலியா ஏ அணிக்கும் இடையில் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது.

 டாப் ஆர்டர்

டாப் ஆர்டர்

இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக ஆட போகும் வீரர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய அணிக்காக கே.எல் ராகுல், மயங்க் அகர்வால் ஓப்பனிங் இறங்குவார்கள். கோலி ஒன் டவுன் இறங்குவார். அதன்பின் புஜாரா களமிறங்குவார்.

அடுத்து யார்

அடுத்து யார்

அதற்கு அடுத்து ரஹானே, ஹனுமா விஹாரி, குல்தீப் யாதவ், அஸ்வின், பும்ரா, ஷமி , முகமது சிராஜ் ஆகியோர் இறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவர்கள 11 பேர்தான் முதல் டெஸ்ட் போட்டியில் பவுலிங் செய்ய உள்ளனர். சமயங்களில் ராகுலுக்கு பதிலாக ப்ரித்வி ஷா களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

 சொல்லிவிட்டார்

சொல்லிவிட்டார்

இவர்கள்தான் இந்திய அணி சார்பாக டெஸ்ட் போட்டிகளில் ஆட போகிறார்கள். கோலி முதல் போட்டிக்கு பின் வெளியேறிவிடுவார். அதற்கு பின் வேறு வீரர்கள் யாராவது அவரின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ளது. பெரும்பாலும் சுப்மான் கில் கோலியின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

ஓரம்கட்டுவார்

ஓரம்கட்டுவார்

இதனால் மீதம் இருக்கும் சில முக்கியமான வீரர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு வழங்கப்படாது என்று கூறுகிறார்கள். அதன்படி பண்ட், உமேஷ் யாதவ் , சைனி, ஆகியோர் மொத்தமாக ஓரம்கட்டப்பட உள்ளனர். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே சைனி பவுலிங் செய்தார். ஆனால் இவர் சரியாக ஆடவில்லை.

போச்சு

போச்சு

அதன்பின் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் டெஸ்ட் தொடரிலும் இவர் ஆட மாட்டார் என்கிறார்கள். முதல் டெஸ்டிற்கு பின் கோலி நாடு திரும்பி விடுவார். அவருக்கு பதிலாக ரஹானே கேப்டனாக இருப்பார்.

Story first published: Sunday, December 13, 2020, 11:31 [IST]
Other articles published on Dec 13, 2020
English summary
Playing 11 predictions for Team India against Australia that starts next week.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+