Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 வருஷத்துக்கு அப்புறமா டெஸ்ட் போட்டி... முதல் போட்டியில விளையாடறத போல பதற்றமா இருக்கு!

சென்னை : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் நாளை மறுதினம் முதல் துவங்கி நடைபெறவுள்ளது.

இந்த தொடரின்மூலம் 2 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் ஆப்-ஸ்பின்னர் குல்தீப் யாதவ் இடம்பெற்றுள்ளார்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுவது முதல் போட்டியில் விளையாடுவதை போன்ற பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

வாய்ப்பு கிடைக்காத யாதவ்

வாய்ப்பு கிடைக்காத யாதவ்

இந்தியாவின் முக்கியமான ஸ்பின்னர்களில் ஒருவராக குல்தீப் யாதவ் உள்ளார். கடந்த 2018-19 ல் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் வெற்றிக்கு இவர் முக்கிய காரணமாக இருந்தபோதிலும் கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

பதற்றத்தை ஏற்படுத்துகிறது

பதற்றத்தை ஏற்படுத்துகிறது

தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யாதவ் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது அறிமுக போட்டிகளில் விளையாடுவதை போன்ற பதற்றத்தை அளிப்பதாக குல்தீப் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

நெருக்கடி உள்ளது

நெருக்கடி உள்ளது

மேலும் சிறப்பாக விளையாட வேண்டிய நெருக்கடியும் தனக்கு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அனைவரும் தன்னை கண்காணிப்பதாகவும் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். ஆயினும் எப்போதும் போலவே அணிக்காக விளையாடி தன்னுடைய 100 சதவிகித திறனை வெளிப்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரிலாக்சாக உள்ளேன்

ரிலாக்சாக உள்ளேன்

அணி சிறப்பாக விளையாடும்போது தானும் சிறப்பாக விளையாட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அப்போதுதான் அனைவரின் பாராட்டுக்கும் தான் உரியவனாவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆயினும் தொடர்ந்து விளையாடும்போதே தன்னம்பிக்கை அதிகமாக வெளிப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னை மிகவும் ரிலாக்சாக தான் வைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, February 3, 2021, 18:44 [IST]
Other articles published on Feb 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+