Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றோருக்கு பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளித்து சிறப்பித்தார்.

தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் 11 தங்கம் உட்பட 57 பதக்கங்கள் வென்று இந்தியா 8-வது இடத்தை பிடித்தது. பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி காலை உணவு வழங்கி சிறப்பித்தார். பின்னர் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

PM Modi felicitates Asian Games medal winners

அப்போது மங்கள்யான் விண்கலத்தின் வெற்றியை சுட்டிகாட்டிய மோடி விளையாட்டு வீரர்களும் அதை போன்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார். தம்மை ஒரு நண்பராக கருதி விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்காக ஆலோசனை வழங்கும் படி வீரர்களை நரேந்திர மோடி கேட்டு கொண்டார்.

இது தொடர்பாக தம்மை எப்போது வேண்டுமானலும் தொலைபேசியில் மூலமாக தொடர்புகொண்டு பேசலாம் அவர் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்திற்காக உழைத்த குத்துசண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.

பதக்கம் வென்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் பிரதமருடன் குழுவாக புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Story first published: Wednesday, October 15, 2014, 8:33 [IST]
Other articles published on Oct 15, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+