கடவுள் நீண்ட ஆயுளை வழங்கட்டும்.. பிரதமர் மோடி பிறந்ததினத்தில் கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்து
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்ததினம் நாடெங்கிலும் பலதரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவரது பிறந்ததினத்தையொட்டி சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் சமூகவலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கி பாதுகாக்கட்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

70வது பிறந்ததினம்
பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய 70வது பிறந்ததினத்தை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு நாடெங்கிலும் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

விராட், சச்சின் வாழ்த்து
இந்நிலையில் பிரதமர் மோடியின் பிறந்ததினத்தையொட்டி கிரிக்கெட் பிரபலங்களும் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் இந்திய கேப்டன் விராட் கோலி தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இதேபோல முன்னாள் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உத்வேகத்தை அளிப்பதாக பாராட்டு
இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் முன்னாள் ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங்கும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். பிரதமர் மோடியின் களைப்பில்லா செயல்பாடுகள், தலைமை பண்பு மற்றும் தொலைநோக்கு பார்வை உள்ளிட்டவை உத்வேகத்தை அளிப்பதாகவும் அவர் சிறப்பான ஆரோக்கியத்தை பெற வாழ்த்துவதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்து
இதேபோல இந்திய தலைமை கோச் ரவிசாஸ்திரியும டிவிட்டர் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நமது பாசத்திற்குரிய சிறப்பான மனிதருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார். நாடெங்கிலும் பிரதமர் மோடியின் பிறந்ததினத்தையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications