Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன கோபமோ.. மோடிக்கே விபூதி அடித்த யுவராஜ்சிங்!

டெல்லி: சண்டிகரில் வரும் 30ம் தேதி கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் திருமணம் நடைபெறுகிறது. மாடல் அழகி ஹசல் கீச்சை அவர் திருமணம் செய்ய உள்ளார்.

தனது திருமணத்தையொட்டி, நாடாளுமன்றத்தில் சமீபத்தில்,பிரதமர் மோடியை சந்தித்து திருமண அழைப்பு வழங்கினார் யுவராஜ்சிங்.

இந்த அழைப்பிதழில், பிரதமர் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், நரேந்திர மோடி என்ற பெயருக்கு பதிலாக, நரேந்தர் மோடி என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

வைரலான மிஸ்டேக்

வைரலான மிஸ்டேக்

இது ஊடகங்களின் கவனத்திற்கு வந்ததில் இருந்து வட இந்திய ஊடகங்களில் அது வைரல் செய்தியாகிவிட்டது. அங்குள்ள சோஷியல் மீடியாக்களும் அதை ஷேர் செய்து வருகின்றன.

நல்லவேளை

நல்லவேளை

ஆனால், மோடி தரப்பில் இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. நல்ல வேளை, "இரண்டாம் குலோத்துங்குவை விட்டுவிட்டானய்யா" என மோடியிடம் இதை கூறி கீ கொடுப்பதற்கு யாரும் இல்லை. அவரும் பெருந்தன்மையாக விட்டுவிட்டார்.

ஜாக்கிரதையாக இருக்கனுமே

ஜாக்கிரதையாக இருக்கனுமே

என்ன இருந்தாலும், நாட்டின் உயர் பதவியிலுள்ள ஒருவரின் பெயரை குறிப்பிடும் போது, அதை சரியாக சரிபார்த்திருக்க வேண்டியது யுவராஜ்சிங்கின் கடமை என்பதை யாரும் மறுக்க முடியாது.

ஆ, பலே, பலே

ஆ, பலே, பலே

யுவராஜ்சிங்கின் திருமணம் பஞ்சாபி வழக்கப்படி உறவினர்களை கூப்பிட்டு ஒரு வாரம் நடைபெறும் என்றாலும் கூட, ஆடம்பரமாக இந்த திருமணம் நடைபெறப்போவதில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஸ்டார் ஹோட்டலில் நடத்துகிறார் யுவராஜ். தற்போது மொகாலியுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் அதில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

Story first published: Saturday, November 26, 2016, 10:15 [IST]
Other articles published on Nov 26, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+