Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மேடையில் மோடி பாராட்டியதும் வைபவ் சூர்யவன்ஷியை கலாய்த்த இந்திய வீரர்கள்.. என்ன நடந்தது?

டெல்லி: ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களைப் பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் நேரில் சந்தித்துப் பாராட்டினார். இந்த விழாவின் போது, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பிரதமர் புகழ்ந்து பேசிய தருணத்தில், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட சக வீரர்கள் அவரை ஜாலியாகக் கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் களம் கண்ட இந்திய அணியில் 15 முதல் 17 வயதுடைய பல இளம் வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இவ்வளவு சிறிய வயதிலேயே அவர்கள் அபாரமாகச் செயல்பட்டு நாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளனர். மக்களின் இதயங்களையும் வென்றுள்ளனர். வெற்றி பெறுவதற்கு வயது ஒரு தடையே அல்ல என்பதை இவர்கள் நிரூபித்துள்ளனர். சிறு வயதிலேயே விளையாடத் தொடங்குவது வீரர்களுக்கு மிகப்பெரிய பலத்தைத் தரும்" என்று புகழாரம் சூட்டினார்.

PM Narendra Modi Praises Vaibhav Suryavanshi at Asian Games Event Team Teases him as Gold Medalist

பிரதமர் மோடி பேசிய போது 15 வயது என சொன்ன போது, இந்திய வீரர்கள் அனைவரும் வைபவ் சூர்யவன்ஷியைப் பார்த்துக் கண்ஜாடை காட்டிச் சீண்டினர். அர்ஷ்தீப் சிங் அவரைப் பார்த்துத் தொடர்ந்து கிண்டல் செய்ய, வைபவ் சூர்யவன்ஷி வெட்கத்துடன் புன்னகைத்தார். ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் மூலம் 15 ஆண்டுகள், 6 மாதங்கள், 7 நாள்கள் வயதிலேயே தங்கம் வென்று, ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றிலேயே தங்கம் வென்ற மிக இளம் இந்திய வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை வைபவ் படைத்தார்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 21 தங்கம் உள்பட மொத்தம் 85 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. முதல் முறையாகக் களம் கண்ட அறிமுக வீரர்களே 41 பதக்கங்களை வென்று தந்துள்ளனர். மகளிர் வீராங்கனைகள் 11 தங்கம் உள்பட 38 பதக்கங்களை அள்ளினர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஐசிசி தலைவர் ஜெய் ஷா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இளம் தலைமுறையினரை விளையாட்டுத் துறைக்கு ஈர்க்க, பதக்கம் வென்ற வீரர்கள் பள்ளிகளுக்குச் சென்று குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Story first published: Friday, October 16, 2026, 8:09 [IST]
Other articles published on Oct 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+