என்னங்க சொல்றீங்க ! மோடி இதை எல்லாம் பண்ண போறாரா? அகமதாபாத் டெஸ்ட் - கலாய்க்கும் நெட்டிசன்கள்
அகமதாபாத் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிற நிலையில் ஒரு பெரிய அப்டேட் கிடைத்துள்ளது.
அதன்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பன்சியும் நாளை அகமதாபாத்துக்கு வந்து கிரிக்கெட் போட்டியை பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் எதற்காக ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரசிகர்கள் போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியை அதிக ரசிகர்கள் கொண்டு பார்த்த சாதனையை அகமதாபாத் டெஸ்ட் படிக்க உள்ளது.

சாதனை
இதற்கு முன்பு இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆசஸ் போட்டியை 94 ஆயிரம் பேர் பார்த்தது சாதனையாக கருதப்பட்டது. இதனை நாளைய போட்டி உடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தை சுற்றி வலம் வந்து ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாசில் பிரதமர் மோடி
இதற்கான ஏற்பாடு பணிகளை இன்று பாதுகாவலர்கள் மேற்கொண்டு இருக்கிறார்கள். இதேபோன்று நாளை 9 மணிக்கு டாஸ் வீசப்பட உள்ளது. இதில் ஒரு வரலாற்று சம்பவம் நிகழவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தான் டாசை போட உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கிரிக்கெட் வர்ணனையும் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் வர்ணனை
இங்கிலாந்து பிரதமர், ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோர் கிரிக்கெட் போட்டியின் போது வர்ணனை செய்வது வழக்கம். இதனால் பிரதமர் மோடியும் அந்த ஃபார்முலாவை பயன்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்தியை கேட்டதும் ரசிகர்கள் பல்வேறு பதிவுகளை போட்டு வருகிறார்கள். இந்திய அணியில் தொடக்க வீரர்கள் சரியில்லை என்பதால் கே ஆர் ராகுல் பதில் சுப்மன் கில் சேர்க்கப்பட்டார்.

ரசிகர்களின் பதிவு
தற்போது அவரும் சரியாக விளையாடவில்லை என்பதால் நாளை நரேந்திர மோடியை ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களம் இறக்க செய்யுங்கள் என கிரிக்கெட் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மேலும் சிலர் நடுவர்கள் தவறான முடிவு வழங்குவதால் பிரதமர் நரேந்திர மோடியை நடுவராக பணியாற்ற சொல்லுங்கள் எனவும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். எனினும் பிரதமர் மோடி மைதானத்திற்கு 8 :35 மணிக்கு வந்து 10 மணிக்கு எல்லாம் சென்று விடுவார் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications