ஓய்வு என்ற வார்த்தையை கூற விரும்பவில்லை.. பாராட்டிய பிரதமர் மோடி.. நன்றி சொன்ன ரெய்னா!
டெல்லி : ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் ஒருந்து ஓய்வை அறிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறி உள்ளார்.
Recommended Video
முன்னாள் கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். அவர் ஓய்வை அறிவித்த சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார்.
இருவரின் ஓய்வு அறிவிப்பு மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இருவரையும் வாழ்த்தி கடிதம் எழுதி உள்ளார்.

தோனிக்கு வாழ்த்து
முன்னதாக தோனியின் கிரிக்கெட் வாழ்வையும், அவரது முன்னேற்றத்தையும் குறிப்பிட்டு வாழ்த்தி இருந்தார் மோடி. அதற்கு தோனி நன்றி கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவுக்கும் வாழ்த்து கூறி உள்ளார் பிரதமர் மோடி.

இளமையும், ஆற்றலும் கொண்டவர்
அவரது கடிதத்தில், ரெய்னா ஓய்வு பெற்றார் எனக் கூற தான் விரும்பவில்லை. நீங்கள் அந்த வார்த்தையை கூற முடியாத அளவுக்கு இளமையும், ஆற்றலும் கொண்டவர். உங்கள் வாழ்க்கையில் அடுத்த இன்னிங்க்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என கூறி உள்ளார்.

கிரிக்கெட் வாழ்வு
மேலும், ரெய்னா முராத்நகரில் வாழ்க்கையை துவங்கி, லக்னோவில் கிரிக்கெட் ஆடியதை குறிப்பிட்டு உள்ள அவர். இந்திய அணிக்காக மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடியதை பெருமையாக கருதுவீர்கள் என கூறி உள்ளார்.

அட்டகாசமான பீல்டிங்
வரும் தலைமுறை, ரெய்னாவை சிறந்த பேட்ஸ்மேன், பயனுள்ள பந்துவீச்சாளர் என அறியும் என்றும் கூறி உள்ளார். அவரது அட்டகாசமான பீல்டிங் குறித்தும், நிறைய ரன்களை அவர் பீல்டிங் மூலம் தடுத்து நிறுத்தியதையும் குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார் பிரதமர் மோடி.

ரெய்னா நன்றி
பிரதமரின் இந்த பாராட்டுக்கு நன்றி கூறி இருக்கிறார் சுரேஷ் ரெய்னா. நாட்டுக்காக நாங்கள் ஆடும் போது நாங்கள் ரத்தத்தையும், வியர்வையையும் அளிக்கிறோம். நாட்டின் மக்கள் மற்றும் அதன் பிரதமரிடம் இருந்து கிடைக்கும் பாராட்டை விட எதுவும் சிறந்ததில்லை என கூறி நன்றி கூறி உள்ளார் ரெய்னா.


Click it and Unblock the Notifications