
இந்திய அணியின் சொதப்பலுக்கு யார் காரணம்
இந்திய அணி இப்படி சொதப்பியதற்கு உண்மையிலேயே யார் காரணம் என்பதே கேள்வியாகும். இதற்கு கொடுக்கப்பட்ட பதில் ஆப்ஷன்களுக்கும், அதை தேர்வு செய்த வாசகர்களின் எண்ணிக்கையும் அடுத்தடுத்த சிலைடுகளில்...

டோணி இல்லை
நிச்சயம் கேப்டன் டோணி இதற்குக் காரணம் இல்லை என்று 2008 வாக்குகள் அதாவது 17.76 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கோஹ்லியும் காரணம் இல்லை
அதேபோல டோணியுடன் மோதுவதாக கூறப்படும் துணை கேப்டன் விராத் கோஹ்லியும் காரணம் கிடையாது என்று 99 வாக்குகள் அதாவது 0.88 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிசிசிஐதான் காரணம்
இந்திய வீரர்களுக்கு சரியான ஓய்வு தராமல் தொடர்ந்து விளையாட வைக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம்தான் காரணம் என்று கணிசமான பேர் அதாவது 22.04 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பதிவான வாக்குகள் 2491 ஆகும்.

திட்டமிடல் சரியில்லை
திட்டமிடல் சரியில்லை என்று 855 வாக்குகள், அதாவது 7.56 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பாலிட்டிக்ஸ்தான் காரணம்
இந்திய அணிக்குள் நிலவும் அரசியல், கோஷ்டிப் பூசலே காரணம் என்றுதான் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது 37.76 சதவீதம் பேர், அதாவது 4268 வாக்குகள் இதற்குக் கிடைத்துள்ளன.

பயிற்சியாளர் இல்லை
நல்ல பயிற்சியாளர் அணிக்கு இல்லாததே காரணம் என்று கருத்து தெரிவித்திருப்போர் 3.95 சதவீதம் பேர் ஆகும். பதிவான வாக்குகள் 446 வாக்குகள்.

காரணம் தெரியவில்லை
காரணம் தெரியவில்லை என்று 10.06 சதவீதம் பேர் கருத்திட்டுள்ளனர். இதற்குப் பதிவான வாக்குகள் 1137 ஆகும்.
இந்தக் கருத்துக் கணிப்பில் பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கை 11,304 ஆகும்.


Click it and Unblock the Notifications